குட் பேட் அக்லி
நடிகர் அஜித் குமார் நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு முன்பே ஜனவரி 10 ஆம் அன்று ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு தேவிஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். த்ரிஷா , அர்ஜூன் தாஸ் , பிரசன்னா , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஹைதராபாதில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் தற்போது நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கும் விடாமுயற்சி படம் பல சிக்கல்களுக்கு பிறகு அஜர்பைஜான், துபாய் ஆகிய வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. சுமார் இரண்டு ஆண்டு காலத்தை நெருங்கும் நிலையில் விடாமுயற்சி என்ற தலைப்பும், விடாமுயற்சி படத்தின் இரண்டு, மூன்று போஸ்டர்களும் மட்டுமே வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில், தீபாவளி வெளியீடாக வேட்டையனை ரிலீஸ் செய்தது லைகா நிறுவனம். விடாமுயற்சி படம் வெளியீடு தள்ளிக்கொண்டே செல்வதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துகொண்டே வருகிறது.
மேலும் படிக்க : Upcoming Movies : அமரன் , கங்குவா போதும்பா... நவம்பர் மாதம் இன்னும் இத்தனை படங்கள் வருது