சொர்க்கவாசல்


நடித்துள்ள படம் சொர்க்கவாசல். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். செல்வராகவன் , பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , நட்டி , சானியா ஐயப்பன் , அந்தோனி தாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ ஸேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத் , அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 


மிஸ் யூ


சித்தா திரைப்படத்திற்கு பின் சித்தார்த்தின் சோலோ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மிஸ் யூ. மாப்ள சிங்கம்’ மற்றும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படங்களின் இயக்குநர் N.ராஜசேகர் இயக்கியுள்ள படம் மிஸ் யூ.  தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.  '7 miles per second' நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 29 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது


பராரி


எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரிஷங்கர் , சங்கீதா கல்யாண் , குரு ராஜேந்திரன் , சாம்ராட்  சுரேஷ் , புகழ் மகேந்திரன் , பிரேம்நாத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பராரி . ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . சாதிய பிரச்சனையை மையப்படுத்திய சமூக அக்கறையுள்ள கதைக்களம் பராரி. வரும் நவம்பர் 22 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 






ஜாலியோ ஜிம்கானா


பிரபுதேவா மற்றும் மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சார்லீ சாப்ளின் , கோவை பிரதர்ஸ் , மகா நடிகன் , இனிது இனிது காதல் இனிது , இங்லீஷ்காரண் உள்ளிட்டபடங்களை இயக்கிய சக்தி சிதம்பரம்  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 22 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போலீஸ்காரன் பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.