ஒரு நிகழ்ச்சியில் ‘ஓ சொல்றீயா’ பாடல் குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து கூறியுள்ளார்.
சமீபத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாடல் என்றால், ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா’ பாடல். படம் வெளியாவதற்கு முன்பே பாடல் செம ஹிட்டடித்து. முக்கியமாக சமந்தா இந்த பாடலுக்கு ஆடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே, பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. பாடலும் எதிர்பார்ப்பை மீறி நன்றாக இருந்ததால், பட்டிதொட்டியெல்லாம் பாடல் பட்டையை கிளப்பியது. ஏற்கெனவே, தென்னிந்தியா வரை மூலம் பிரபலமடைந்திருந்த சமந்தா, இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் தெரிந்தார். இந்தப்பாடலுக்கு சமந்தா போல் நடனம் ஆடி பல வெளிநாட்டினவர்களும் வீடியோ வெளியிட்டனர். தமிழில் ‘ஓ சொல்றீயா’ , தெலுங்கில் ‘ஊ அண்டாவா’ என இடம்பெற்ற பாடலுக்கு டிஎஸ்பி இசையை தெறிவிட்டிருப்பார்.
தற்போது,ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பாடல் குறித்து சமந்தா மனம் திறந்து கூறியுள்ளார்.‘ஓ சொல்றீயா’ பாடல் இந்தளவிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், எங்கும் சென்றாலும் இந்தப் பாடல் குறித்து கேட்பதாகவும், இதனால், தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக, சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியதாகவும் தகவல் வெளியானது. சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது சமந்தா வலம் வர இருக்கிறார். ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா 1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதபோல், அடுத்த படத்தில் இருந்து 3 கோடி என நிர்ணயித்துவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.
நிர்வாணமாக பார்த்த நபர்! ஏடாகூட கேள்வி கேட்ட ஆளுக்கு நச்சுனு பதில் அளித்த யாஷிகா ஆனந்த்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்