இங்கிலாந்தில், 14 வயது மாணவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட ஆசிரியை ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவன் இங்கிலாந்தின் சிறிய நகரமான ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஹோடெஸ்டனில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறான், அங்கு 23 வயதான ஹன்னா ஹாரிஸ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அவர் தன்னை அந்த மாணவனின் பெற்றோரிடம் அவன் காதலிக்கும் பெண்ணின் தாய் எனக் கூறி ஏமாற்றியுள்ளார், ஆனால் அப்படி ஒரு காதலியே அந்த மாணவனுக்கு இல்லை என்று தெரியவந்தது.


கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த ஆசிரியை பிடிபட்டார். பிடிப்பட்ட அவர் செயின்ட் அல்பன்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். நீதிபதி கரோலின் விஜின் ஹன்னா ஹாரிஸை விசாரித்துள்ளார். பெட்ஃபோர்ட்ஷையரின் ஹென்லோவில் உள்ள ஹாரியர் மில்லில் இருந்து வரும் ஹாரிஸ், சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு தனது பெயரை மாற்றி ஒலிவியா என்று கூறியுள்ளார். அவர் தன் மகள் கைலாவுடன் வாழ்ந்து வருவதாகவும், கைலாவை தங்களது மகன் காதலிக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.



அவர் மொபைலில் மெசேஜ் வாயிலாக இதனை பேசியுள்ளார். அந்த மெசேஜில் ஹாரிஸ் எழுதியதாவது, "கெய்லாவும் உங்களுடைய பையனும் நலமாக இருப்பதாகத் தெரிகிறது, அதனால் அவர்களை தன்னுடன் அழைத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்று எழுதியுள்ளார். அதனை நம்பிய சிறுவனின் பெற்றோர் அவருடன் தங்களது மகனை அனுப்பியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் சிறுவனின் அண்ணன் இந்த உறவைப் பற்றி அறிந்த பிறகு பிரச்சனை வெளியில் தெரியவந்தது. அப்போது ஒலிவியா மற்றும் கெய்லா இருவரும் ஹன்னா ஹாரிசால் கற்பனையாக உருவாக்கப்பட்ட பெயர்கள், என்று பாதிக்கப்பட்ட மாணவன் ஒப்புக்கொண்டார். இதனை அறிந்த பெற்றோர் தங்களே தங்கள் மகனிடம் இப்படி நடந்துகொள்ள வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டோமே என்ஸ்று குற்றவுணர்வு கொண்டு வருந்தினர் என்று வழக்கறிஞர் சைமன் வில்ஷயர் கூறினார். 



நீதிபதி விஜின் கூறுகையில், "பெற்றோராகிய நீங்கள் சிறுவனை வளர்த்தீர்கள், நீங்கள் அவரை உங்கள் காரில் பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள், அவருக்கு பிடித்த இனிப்புகளை வாங்கிக் கொடுங்கள், ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுங்கள் அவரை மெக்டொனால்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்று கூறினார். அந்த ஆசிரியர் ஹன்னா ஹாரிஸ் இந்த உறவை வளர்த்துக் கொள்ள அனுமதித்ததற்காகவும், பள்ளிக்கு வெளியே அவரைச் சந்தித்தததற்காகவும், பெற்றோரை ஏமாற்றியதற்காகவும் வருத்தம் தெரிவித்தார். டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020 க்கு இடையில் அந்த மாணவனுடன் வைத்துக்கொண்ட பாலியல் செயல்பாடுகள் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை ஹாரிஸ் மறுத்தார். நான்கில் ஒன்று ஒரு சூப்பர் மார்க்கெட்டின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது. அதற்கு மட்டும் நேரில் பார்த்த சாட்சி இருந்ததால் நிரூபிக்கப்பட்டது. மற்ற மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து ஹன்னா விடுவிக்கப்பட்டார். ஹன்னா ஹாரிஸை வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளியாக பதிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதி 6 வருடம் ஜெயில் தண்டனை கொடுத்துள்ளார். மேலும் இதற்கு மேல் அவர் குழந்தைகளுடன் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.