நடிகை பிரியங்கா மோகனின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் வெளியான நானியின் கேங் லீடர் படத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பலரது கனவுக்கன்னியாக இருக்கும் பிரியங்காவின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், இதுவரை பார்த்திராத மாடர்ன் உடையில் ப்ரியங்கா மோகனாக இருக்கிறார். 'She' என்ற புத்தகத்தின் அட்டைப் படத்திற்கு போட்டோஷூட் எடுத்தபோது, இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. நம்ம ப்ரியங்கா மோகன் இது என்று வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாயை பிளக்குகின்றனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்