தேசிங்கு ராஜா படம் வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் நடிகர் விமல் மற்றும் இயக்குநர் எழில் இணைந்துள்ளனர்.
நடிகர் விமல்
விஜய் நடித்த கில்லி, அஜித் குமார் நடித்த கிரீடம் உள்ளிட்டப் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வந்த நடிகர் விமல், பாண்டியராஜ் இயக்கத்தில் பசங்க படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து களவாணி, வாகை சூட வா போன்ற படங்கள் அவருக்கும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. கலகலப்பு , கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்தப் படங்கள்.
இயக்குநர் எழில்
ராஜா, துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, வேலனு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் எழில். கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். இப்படத்தில் பிந்து மாதவி, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். டி. இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.
பொதுவாகவே காமெடி சப்ஜெக்ட்களில் தனித்துவமான ரசனையைக் கொண்ட இயக்குநர் எழில். இவர் இயக்கிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் அதிகம் கவனம் ஈர்த்துள்ளன, குறிப்பாக தேசிங்கு ராஜா படத்தில் நடிகர் சூரி மற்றும் தம்பி ராமையாவுக்கான காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
மேலும் இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய சரவணன் இருக்க பயமேன், வெள்ளக்கார துரை ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. அதே நேரத்தில் நடிகர் விமல் நடித்த படங்களும் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளை பெறவில்லை. தேசிங்கு ராஜா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
தேசிங்கு ராஜா 2
எழில் இந்தப் படத்தை இயக்க, விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இம்ஃபினிடி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ஆர் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் முழுக்க முழுக்க காமெடிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
Kalki 2898 AD: 6 ஆயிரம் வருடம் முந்தைய கதை! பிரபாஸின் கல்கி 2898 பட ரிலீஸ் எப்போது?