பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.


பிரபாஸ்


ஹீரோவாக நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின் கிட்டதட்ட சூப்பர் ஹீரோவாகவே மாறிவிட்டார். அடுத்தடுத்தப் பெரிய பட்ஜட் படங்கள் பான் இந்திய அளவு விளம்பரங்கள் என பிரபாஸ் நடித்து வரும் படங்களில் செலவு பெரிதாகிக் கொண்டே போகிறது. ஆதிபுருஷ் படத்தின் தோல்விக்குப் பின் சரிந்த பிரபாஸின் பாலிவுட் மார்க்கெட் சலார் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. சலார் திரைப்படம் வெளியாகி ஒரு மாத காலமே ஆகும் நிலையில் பிரபாஸ் நடித்து வரும் அடுத்தப் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது


கல்கி 2898


 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898. உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சுமார் 600 கோடி ரூபார் செலவில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. 


ரிலீஸ் தேதி






முன்னதாக கல்கி 2898 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனங்களைப் பெற்றது. அதிகளவிலான விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து இந்தப் போஸ்டரை மேம்படுத்தி படக்குழு மீண்டும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர் வெளியீடு சாண்டியாகோவின் பிரபல ‘காமிக் கான்’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. பிரபல ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ், டியூன், அயர்ன் மேன் என பல படங்களை நினைவூட்டும்படி இருந்தாலும், இந்த டீசர் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது.  தற்போது கல்கி 2898 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என தகவல்கள்  வெளியாகியுள்ளன. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.




மேலும் படிக்க : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Pongal 2024 Movie Release LIVE: 4 பொங்கல் படங்கள் இன்று ரிலீஸ்.. வெற்றி யாருக்கு? - அப்டேட்டுகள் உடனுக்குடன்..!