தனுஷ்


தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தின் ரிலீஸூக்கு காத்திருக்கிறார். தனுஷ் இயக்கி நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ,செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ராயன் படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.


ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


தேரே இஷ்க் மே (Tere Ishk Mein)


தொடர்ந்து ஆனந்த் எல் ராய் இந்தியில் இயக்கும் ’தேரே இஷ்க் மே’ படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கியவர் ஆனந்த். ராஞ்சனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி அத்ரங்கி ரே என்கிற படத்தில் இணைந்தார்கள். தொடர்ந்து மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மே படத்தில் இந்த கூட்டணி தொடர இருக்கிறது. ராஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். 






முதல் பாகத்தில் சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தில் த்ரிப்தி திம்ரி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடித்து வெளியான அனிமல் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலமானது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு வந்துள்ளன.  




மேலும் படிக்க : Indian 2 Twitter Review : அலறவிட்டதா ஷங்கர், கமல், அனிருத் கூட்டணி.. ட்விட்டரில் ரசிகர்கள் சொல்வது என்ன?


Director Shankar : லஞ்சம் பற்றி விரிவாக பேசும் இந்தியன் 2... ஜீரோ டாலரன்ஸ் உருவாக யார் காரணம்... மனம் திறந்த ஷங்கர்