இந்தியன் 2


ஷங்கர் இயக்கி கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சித்தார்த் , ரகுல் ப்ரீத் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே சூர்யா , காஜல் அகர்வால் , பிரியா பவாணி சங்கர் , விவேக் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.


லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமுக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்தியன் 2 படத்தின் ஹைலைட்ஸ் என்ன , குறைகள் என ரசிகர்கள் சொல்வது என்னவென்பதைப் பார்க்கலாம்.


இந்தியன் 2 ஹைலைட்ஸ்






இந்தியன் 2 படத்திற்கு கமலுக்கு புதிய டைட்டில் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியன் 2  படத்தின் முதல் பாகத்தில் ரஹ்மான் இசையமைத்த பின்னணி இசை சில காட்சிகளில் அப்படியே இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.


ஒரு பக்கம் அனிருத் இன்னொரு பக்கம் ஏ.ஆர் ரஹ்மான் என ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். மேலும் படத்தின் இறுதியில் இந்தியன் 3-ஆம் பாகத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது


இந்தியன் 2 முதல் பாதி விமர்சனம்






இந்தியன் 2 வின் முதல் பாகம் ஷங்கர் படங்களுக்கே உரிய எமோஷன்  மற்றும் மாஸ் காட்சிகள் அடங்கியதாக இருப்பதாகவும் .சித்தார்த்தின் காட்சிகள் மற்றும் கமலின் எண்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். 


இரண்டாம் பாதி விமர்சனம்






இரண்டாம் பாதியில் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் சண்டைக் காட்சிகள் இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவாக ரசிகர்கள் கருதுகிறார்கள் 


கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்






தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் இந்தியன் 2 படம் வெகுவாக கவர்ந்துள்ளது. பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் , கமலின் எண்ட்ரி , சித்தார்த் , பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்