ஒரு துணை நடிகராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து இன்று ஹீரோ அந்தஸ்த்தை கடும் போராட்டத்துக்குப் பிறகு எட்டிப் பிடித்துள்ளவர் நடிகர் சூரி. காமெடியனாக, குணச்சித்திர நடிகராக படிப்படியாக முன்னேறிய சூரிக்கு மிகப்பெரிய அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு திரைப்படம் தான் 2009ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படம். ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தவரை ஒரு காமெடியனாக அடியெடுத்து வைக்க உதவிய திரைப்படம். 


 




'வெண்ணிலா கபடிக் குழு' படத்தைக் காட்டிலும் அதில் இடம் பெற்ற ஒரு காமெடி காட்சி இன்று வரை அதிகம் பேசப்பட்டு வருகிறது. அது தான் பரோட்டா காமெடி. அசால்ட்டாக 50 பரோட்டாக்களை சாப்பிட்டுவிட்டு “மீண்டும் முதலில் இருந்த ஆரம்பிங்க” என சொன்ன சூரியின் அந்த காமெடி காட்சி இன்று வரை ட்ரெண்ட்டிங் தான். 


இந்த பரோட்டா காட்சியில் நடித்தது குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். "உண்மையிலேயே அந்த பரோட்டா காட்சியில் நடிக்க வேண்டியது நானில்லை. ஹரி வைரவன் என்ற தம்பி தான் நடிப்பதாக இருந்தது. சமீபத்தில் தான் அவர் உடம்பு சரியில்லாமல் உயிரிழந்தார். முதலில் கபடி பயிற்சி நடக்கும். காலையில 10 மணி வரைக்கும் கபடிப் பயிற்சி எடுப்போம். அப்புறம் போய் குளிச்சிட்டு சாப்பிட வர சொல்லுவாங்க. அங்கேயே சாப்பாடு எல்லாம் நடக்கும். அதுக்கு அப்புறம் டயலாக் ரிகர்சல் போகணும். அந்த ரிகர்சல் ட்ரைனிங் எல்லாம் அந்த பையன் தான் பண்ணான். 



அதுக்கு அப்புறம் தான் இயக்குநர் சுசீந்திரன் யோசிச்சார். “குண்டா இருக்கறவன் நிறைய சாப்பிடுவது சகஜம் தான். ஒல்லியா இருக்கவங்க பண்ணா தான் அது காமெடியா இருக்கும்” அப்படினு யோசிச்சார். நான் ஏற்கெனவே பண்ண சீன் எல்லாம் பார்த்துட்டு அப்புறமா என்னை அந்த சீன்ல நடிக்க வைச்சார். அப்படி தான் அந்தக் காட்சியில் நடிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சுது. அது தான் என்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தி இருக்கு" என நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார் நடிகர் சூரி. 


நடிகர் சூரி பரோட்டா காமெடி மூலம் பிரபலமாகி இருந்தாலும் அவருக்குப் பிடிக்காத ஒரு ஒரு உணவு என்றால் அது பரோட்டா தானாம். அந்தக் காட்சியில் 50 பரோட்டா சாப்பிடுவது தான் போட்டி. ஆனால் உண்மையில் சூரியால் 13 பரோட்டா வரை தான் சாப்பிட முடிந்ததாம். 


மேலும் படிக்க:Siragadikka Aasai Serial: முத்துவின் சந்தேகம்.. மனோஜிடம் ஏமாற்றி பணத்தை வாங்கும் ரோகிணி- சிறகடிக்க ஆசையில் இன்று!


Ajithkumar: அடங்காத கோபம்.. விஜய் பேனரை கிழித்தெறிந்த அஜித் ரசிகர்கள்.. குவியும் கண்டனம்!