Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


மனோஜ் தன் அக்கவுண்டுக்கு மாமானார் 15 லட்சம் பணம் அனுப்பி இருப்பதாக சொல்கிறார். ”பார்லர் அம்மாவோட அப்பா ஏன் அவங்களுக்கு பணம் அனுப்பாம உன் பெயருக்கு அனுப்புனாரு” என்று முத்து கேட்கிறார். பின்னர் தான் அப்பாவிடம் மனோஜ் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பக் கூறியதாக சொல்லி சமாளிக்கின்றார் ரோகிணி. விஜயா மீனாவை குத்திக்காட்டி பேசுகிறார். ”என்னை வம்புக்கு இழுக்கலனா உங்களுக்கு தூக்கமே வராது இல்ல அத்தை” என மீனா கேட்கிறார்.


”அவரு சொந்தமாவே உழச்சி சம்பாதிப்பாரு” என்று மீனா சொல்கிறார். ”அப்போ என் பொண்டாட்டி வீட்ல இருந்து தான் வாங்கி பொழைக்குறேனு சொல்றியா” என மனோஜ் மீனாவிடம் கேட்கிறார். ”என் மாமியார் வீட்ல இருந்து யாரும் எனக்கு எதுவும் வாங்கி கொடுக்க வேணாம். ஏன்னா என் காரே என் பொண்டாட்டி வாங்கி கொடுத்தது தான்” என முத்து சொல்கிறார். ரோகிணி, பணம் வந்தது குறித்து எல்லோரிடமும் சொன்ன விதம் குறித்து மனோஜை திட்டுகிறார்.


அதற்கு மனோஜ், ”பணம் இருக்குறதுனால தானே எல்லோரும் கேள்வி கேட்குறாங்க. அதை சீக்கிரமே செலவு பண்ணி காலி பண்ணிடலாம்” என சொல்கிறார். ”அவசரப்பட்டு எதாவது ஒன்னுல போய் காச போட்டு ஏமாந்துடாத” என ரோகிணி மனோஜிடம் சொல்கிறார். பின் ரோகிணி மீனாவிடம் சென்று ”முத்து ஏன் கேள்வி கேட்குறாரு” என சண்டை போடுகிறார். ”உங்க ஹஸ்பண்ட்னால இந்த வீட்ல வராத பிரச்சனையே கிடையாது” என ரோகிணி சொல்கிறார்.


பின் மீனா முத்துவிடம் சென்று ”நீங்க ஏன் அவங்க விஷயத்துல தலையிடறீங்க” என சண்டை போடுகிறார். ”நீங்க பேசிட்டு போய்டுவிங்க அத்தையும் ரோகிணியும் வந்து என் தலைய தானே உருட்டுவாங்க” என்று மீனா கேட்கிறார்.  ”வீடுனா சண்டை நடக்கத்தான் செய்யும். சண்டையே நடக்காத வீடு எது தெரியுமா? காலியா இருக்குற வீடு தான்” என்று முத்து சொல்கிறார்.


ரோகிணியும் வித்யாவும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது பி.ஏ அங்கு வந்து தன் கல்யாணத்துக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் எனக் கேட்டு ரோகிணியை மிரட்டுகிறார். ”நாளைக்குள்ள பணம் வர்ல நான் நேரா கிளம்பி உன் வீட்டுக்கு வந்துடுவேன்” என்று பி.ஏ சொல்கிறார். ரோகிணி மனோஜிடம் ஒரு லட்சம் கேட்கிறார். அதற்கு இரண்டு சதவீதம் வட்டி தருவதாகவும் சொல்கிறார். பின் மனோஜ் ரோகிணிக்கு ஒரு லட்சம் கொடுக்கிறார் அதற்கு வட்டியாக ரோகிணி இரண்டாயிரம் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.