நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளி மகன்; காண பெற்றோர் இல்லை..கலங்கிய கண்கள்

மயிலாடுதுறை அருகே தாய், தந்தையருடன் பள்ளி பருவம் முதல்  கூலி தொழிலாளியாக பணிபுரிந்து கடும் வறுமையில் நீதிபதியாக இளைஞர்  சாதித்துக் காட்டியுள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோவில் ஒன்றியம் சங்கரன்பந்தல் அடுத்த முனிவளங்குடி பிள்ளையார் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணியன், அஞ்சம்மாள் தம்பதியினர். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது மகனான பாலதண்டாயுதம், தங்களது குடும்பத்தின் ஏழ்மை நிலையை உணர்ந்து பெற்றோருடன் தனது சிறு வயது முதலே கூலி வேலைக்கு தானும் சென்று கொண்டே தனது பள்ளி படிப்பை சங்கரன்பந்தலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்தார்.

Continues below advertisement

TN Agriculture Budget 2024: ரூ. 5 கோடியில் உழவர் அங்காடிகள் - வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு


மேலும், ஏழ்மை நிலை காரணமாக படிக்க வசதியின்றி ஏழு ஆண்டுகள் படிக்க முடியாமல் பல்வேறு கூலி வேலைகளுக்கு சென்று உள்ளார். இருப்பினும் தான் வழக்கறிஞராக வேண்டும் என்ற விடா முயற்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எழுதராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் இளங்கலை படிப்பை முடித்து, பின்னர் திருச்சி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அரசு சட்ட கல்லூரியில் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவிலில் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார். 

TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு


இந்நிலையில் தாய் தந்தை இருவரும் இறந்துவிட, அவர் திருமணம் செய்து கொண்டு தனது ஊரிலேயே வசித்து வந்தார். வழக்கறிஞராக இருக்கும் பொழுது தான் நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தன்னை தயார் படுத்திக்கொண்டு தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று தனது 36 ஆவது வயதில் தற்பொழுது உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.  மேலும் 2015 -க்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நீதிபதியாக இளைஞர் தேர்வாகியுள்ளார்.  இந்த சூழலில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பாலதண்டாயுதத்திற்கு மயிலாடுதுறை வழக்கறிஞர் அலுவலகத்தில் மாலை அணிவித்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

20 years of Autograph: மறக்க முடியாத கடந்த கால வாழ்க்கை.. 20 ஆண்டுகளை கடந்த 'ஆட்டோகிராஃப்' படம்!


மேலும், தனது குடும்பத்தினரும் வீட்டில் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஏழ்மை நிலையிலும் விடா முயற்சியிலும் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள பாலதண்டாயுதத்திற்கு வீடு தேடி சென்று பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் இதில் முழு மகிழ்ச்சி அடையாத பாலதண்டாயுதம், தான் நீதிபதியாக தேர்வாகியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய ஏழ்மை நிலையில் தன்னுடன் இருந்த தனது பெற்றோர் தற்பொழுது அதனை காண தன்னுடன் இல்லையே என மனம் கலங்கி கண்ணீர் வடித்தார். மேலும் சாதிக்க எவருக்கும்  வறுமை தடையில்லை எனவும், தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் இருந்தால் சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Tops 5 Rated GNCAP Cars: இந்தியாவில் பாதுகாப்பிற்கான அதிக ரேட்டிங் பெற்ற கார்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ..!

Continues below advertisement
Sponsored Links by Taboola