ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமானார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், “மொய்தீன் பாய் வந்தாச்சு.. சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..” என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக திருவண்ணாமலையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளமான திருவண்ணாமலைக்கு சென்ற ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு, அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். 


தற்போது, திருவண்ணாமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.


அப்போது அமைச்சர், ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.


லால் சலாம் படத்தை நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்தை வைத்து ஐஷ்வர்யா இயக்கி வருகிறார். இதில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடிக்கின்றார். இந்நிலையில் ரஜினி இப்படத்திற்கான படபிடிப்புக்கு செல்வது குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.  ரஜினிகாந்த் நடிப்பதே இப்படத்திற்கு பெரிய விளம்பரம் தான், இந்நிலையில் அவர் குறித்த அப்டேட்டுகள் இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 


இதற்கிடையே ,நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.  இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது. 


மேலும் படிக்க,


Vande Bharat Rail: பக்தர்களுக்கு குட் நியூஸ்... தமிழகத்திற்கு வரும் புது வந்தே பாரத்... எந்த ரூட்டில் தெரியுமா?


Tomato Price Hike: நல்ல சேதி.. நாளை முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் - தமிழக அரசு அறிவிப்பு