சென்னை 28 , சத்தம் போடாதே ஆகிய படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டவர் நடிகர் நிதின் சத்யா. இவர் இன்று தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நிதின் சத்யாவின் திரை வாழ்க்கை எப்போது தொடங்கியது, தற்போது அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்க்கலாம்!


நிதின் சத்யா


லண்டனில் இருக்கும் நேஷ்னல் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் மார்கெட்டிங் படித்து முடித்த நிதின் சத்யா 2003ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய காலாட்படை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சித்திக் இயக்கி கமல்ஹாசன் நடித்து வெளியான வசூல் ராஜா படத்தில் நடித்திருந்தார். தன் காதலி தன்னை விட்டு சென்றுவிட்டதாக விஷம் சாப்பிட்டுவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கமல்ஹாசனுடன் நடித்ததை அடுத்து ஜீ படத்தில் அஜித் குமாருடனும், மற்றும் மஜா படத்தில் விக்ரமுடன் நடித்திருந்தார்.


சென்னை 28


நிதின் சத்யா பரவலாக ரசிகர்களிடம் சென்றடைந்தது வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான “சென்னை 28” திரைப்படத்தில் தான். கிரிகெட்டை மையமாக வைத்து காமெடியாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கவனம் பெற்றார்கள். இப்படியான நிலையில் முதல் முறையாக ஒரு படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு நிதின் சத்யாவுக்கு வந்தது. இயக்குநர் வசந்த் இயக்கிய “சத்தம் போடாதே” படத்தில் ரத்தினவேல் காலிதாஸ் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் நிதின் சத்யா.


சேரன் நடித்த ராமன் தேடிய சீதை, முத்திரை, பாலைவன சோலை, மயங்கினேன் தயங்கினேன், பிரியாணி உள்ளிட்ட படங்களில் நடித்த சத்யன் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் ஸ்கோர் செய்தார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 இரண்டாம் பாகத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.


தயாரிப்பாளர்


நடிகராக மட்டுமில்லாமல் 2018இல் ஜருகண்டி என்கிற படத்தை தயாரித்தார் நிதின் சத்யா. தொடர்ந்து வைபவ் ரெட்டி, வெங்கட் பிரபு, வானி போஜன் நடித்த லாக் அப் படத்தை தயாரித்தார். இந்த படம் 2020 ஆகஸ்டில் ஜீ ஃபைவில் வெளியானது. இதற்கடுத்ததாக மகத், சானா மக்பூல் இணைந்து நடித்த காதல் கண்டிஷன்ஸ் அப்ளை என்கிற ரொமாண்டிக் காமெடி படத்தை தயாரித்துள்ளார்.




மேலும் படிக்க : Vijay Sethupathi:விஜய் சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? அண்ணாமலை கேள்வி


Watch Video: மறைந்த அப்பாவின் கனவை நிறைவேற்றிய சன் டிவி சீரியல் நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்!