வெள்ளித்திரை நடிகர்களை போலவே சின்னத்திரை நடிகர்களும் சமீப காலமாக மிகவும் பிரபலமானவர்களாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். சோசியல் மீடியாவில் தூள் கிளப்பும் சின்னத்திரை நடிகர்களுக்கு லட்சக்கணக்கான பேன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். அவர்கள் என்ன போட்டோ, வீடியோ போட்டாலும் அள்ளி குவித்து வருகிறார்கள் அவரின் பாலோயர்ஸ். 


 சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் சமீப காலமாக மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி அதன் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது ஒரு ட்ரெண்ட்டாக இருந்தது. அதன் வரிசையில் சில சின்னத்திரை பிரபலங்கள் சொந்தமாக வீடு, பிளாட்களை வாங்கி அதன் ஹோம் டூர் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் தனது தந்தையின் கனவை நிறைவேற்றி உள்ளார். அதன் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து லைக்ஸ் அள்ளுகிறார். 


 




சன் தொலைக்காட்சியில் மதிய நேரங்களில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று 'பிரியமான தோழி'. அதிக அளவிலான ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சீரியலில் சாண்ட்ரா பாபு, விக்கி ரோஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 


இந்த சீரியலின் நாயகி சாண்ட்ரா பாபு தமிழ் சின்னத்திரையில் நுழைவதற்கு முன்னர் மலையாள தொலைக்காட்சி சேனலில் மிகவும் பிரபலமான தொடரான கருத்தமுத்து என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'தூவல்ஸ்பர்ஷம்' என்ற தொடரில் நடித்துள்ளார். 


சன் டிவியில் 2019ம் ஆண்டு ஒளிபரப்பான சாக்லேட் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். அதைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு முதல் 'பிரியமான தோழி' சீரியலில் நடித்து வருகிறார். அதே சமயம் மலையாளத்தில் 'நின்னிஷ்டம் என்ஷ்டம்' மலையாள சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ள சாண்ட்ரா பாபுவை இனியும் பல சீரியல்களில் காண வாய்ப்புகள் உள்ளது. 


 




சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தான் அனைவரின் கனவாகவும் இருக்கும். அதே போன்ற ஒரு கனவு தான் சாண்ட்ராவுக்கும் இருந்துள்ளது.  தனது குடும்பத்துக்கான ஆடம்பரமான கனவு இல்லம் ஒன்றை வாங்கியுள்ளார் சாண்ட்ரா. இது அவரின் தந்தையின் கனவாக இருந்துள்ளது. ஆனால் அந்த கனவை மகள் நிறைவேற்றி உள்ளார். அதை ஒரு வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். 


 






"இறுதியாக நான் இதை செய்துவிட்டேன் அப்பா …எனக்கு தெரியும் இது உங்கள் ஆசீர்வாதம். நீங்கள் தான் என் கார்டியன் ஏஞ்சல். இனி உங்களை என் கண்களால் பார்க்கவோ, கைகளால் தொடவோ முடியாது, ஆனால் என் இதயத்தில் உங்களை என்றென்றும் உணர முடியும்.


எனக்கு கனவு காணக் கற்றுக் கொடுத்த என் அம்மா - அப்பாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். "பாபுவின் வில்லா", எனது புதிய வீட்டிற்கு என் அப்பாவின் பெயரை வைத்துள்ளேன். நான் உங்களுக்காக வாழ்வேன். நீங்கள் தான் என்னுடைய சூரிய ஒளி. ஐ மிஸ் யூ..." என தனது தந்தையின் நினைவாக குறிப்பு ஒன்றையும் வீடியோவுடன் போஸ்ட் செய்துள்ளார் சாண்ட்ரா.  ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.