தனுஷ்


தமிழ் , இந்தி , தெலுங்கு என அனைத்து சினிமாத் துறையிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் தனுஷ். 2018 ஆம் ஆண்டு The Extraordinary Journey of the Fakir என்கிற படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் நடிப்பு ஹாலிவுட் திரை ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ரூஸோ பிரதர்ஸ் உருவாக்கிய தி கிரே மேன் படத்திலும் தனுஷ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ் 


சோனி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தனுஷூடன் இணைந்து நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் இம்மாகுலேட் , ஹேண்ட்மேட்ஸ் டேல் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சிட்னி ஸ்வீனி. பிரபல ஜப்பானிய வீடியோ கேம் ஸ்ட்ரீட் ஃபைட்டர். இந்த கேமை திரைப்படமாக்க சோனி பிக்ச்சர்ஸ் முடிவு செய்தது. 2026 ஆம் ஆண்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படத்திற்கான திரைக்கதை பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. 








 




மேலும் படிக்க : Jailer 2 : ஜெயிலர் 2 படத்திற்கு நெல்சன் சொன்ன கண்டிஷன்..பதறிய சன் பிக்ச்சர்ஸ்


Debut Directors 2024: இவங்க தான் இந்த ஆண்டின் டாப் அறிமுக இயக்குநர்கள்...ஒரு குட்டி ரீவைண்ட்