ஜெயிலர் 2
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் நெல்சன். கூலி படத்தின் படப்பிடிப்பிற்கு அடுத்து இப்படத்தின் வேலைகள் தொடங்க இருக்கின்றன. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ வெளியாக இருக்கிறது. ஜெயிலர் 2 படம் பற்றி முக்கியமான தகவல் ஒன்றை வலைப்பேச்சு சேனல் வெளியிட்டுள்ளது.
நெல்சன் போட்ட கண்டிஷன்
சமீப காலங்களில் வெளியான எல்லா படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இரண்டாம் பாகங்களாக வெளியான படங்கள் பெரியளவில் கவனமீர்க்கவில்லை. மற்ற திரைத்துறையில் பாகுபலி , புஷ்பா , கே.ஜி.எஃப் போன்ற படங்கள் பான் இந்திய வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2. ஆனால் ரஜினிக்கு இரண்டாம் பாகத்தின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை என்று வலைபேச்சு தெரிவித்துள்ளது. இதனால் ஜெயிலர் 2 படத்திற்கு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸிடம் ஒரு ஸ்பெஷல் கண்டிஷன் நெல்சன் போட்டுள்ளார். அதாவது ஜெயிலர் 2 படத்தை மொத்தம் 13 மாதங்கள் எடுக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். முந்தைய பாகத்தில் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் இப்படத்திலும் இடம்பெறுவார்கள் மேலும் பல புதிய கதாபாத்திரங்கள் படத்தில் இணைய இருக்கிறார்கள். இதனால் படப்பிடிப்பை எந்த வித அழுத்தமும் இல்லாமல் நிதானமாக எடுக்க இந்த நிபந்தனையை அவர் வைத்துள்ளதாக வலைப்பேச்சு சேனலில் கூறியுள்ளார்கள்
நெல்சனின் இந்த கண்டிஷனைக் கேட்டு சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் கொஞ்சம் பதறிவிட்டதாகவும் ஆனால் கடைசியில் அவர்கள் இந்த நிபந்தைக்கு சம்மதம் தெரிவித்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்கள். 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க : Jani Master : ஜானி மாஸ்டரை துரத்தியதா நடன இயக்குநர் சங்கம்...?
Puspa 2 : காட்டுத்தீ போல் பரவும் வசூல்..4 நாட்களில் புஷ்பா 2 செய்த சாதனை