Malli Poo Song: ‛எப்போ வரப் போற...’ வீடியோ சாங்க் எப்போ வரப் போற? ஏங்க வைக்கும் ஏஆர்ஆர் மல்லிப்பூ!

வொர்க்-அவுட்டாகிய ஏ.ஆர்.ஆர் - மது ஸ்ரீ காம்போ.. வைரலாகும் மல்லிப்பூ பாடல்!

Continues below advertisement

வெந்து தணிந்தது காடு நேற்று வெளியான நிலையில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. சிலர் இப்படம் மெதுவாக சென்றாலும், சிம்புவின் நடிப்பும் ஏ.ஆர் ரகுமானின் இசையும் படத்தை தூக்கி நிறுத்துகிறது என்று கூறி வருகின்றனர்.

Continues below advertisement

ஒரு பக்கம், படம் பார்க்க சகிக்கவில்லை, தூக்கம் வருகிறது, வெந்து தணிந்தது காடு நொந்து தணிந்தது காடு போல் உள்ளது என ட்ரால் செய்து வருகின்றனர். படம் வெளியாகும் நாளுக்கு முன்னதாகவே,  இயக்குநர் கெளதம் மேனன் நன்றாக தூங்கிவிட்டு வருவமாரு கேட்டுக்கொண்டார். படத்தின் கதாப்பாத்திரங்கள் கதை அமைப்புக்கு  செட் ஆவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றும் கூறினார். 

இதை கேட்டு விட்டு அடுத்த நாள் படத்தை பார்த்த சிலர் புலம்பி வருகின்றனர். கெளதம் மேனன் வழக்கமாக லவ், ரொமான்ஸ்  கதைகளை எடுப்பவர், இம்முறை புதிதாக கேங்ஸ்டர் படத்தை எடுத்து இருக்கிறார். இது போன்ற கதை, அவரின் முதல் அனுபவம்  என்பதால் ரசிகர்கள் அலர்ட் ஆகி இருக்க வேண்டும். ஓபன் மைண்ட் உடன் படத்தை பார்த்தவர்கள், சிம்புவின் புதிய படத்தை நல்லதான் இருக்கு என்று சொல்லி வருகின்றனர்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறக்குமா நெஞ்சம், மல்லி பூ பாடல்தான் நல்லா இருக்கு அந்த பாட்டுக்காகதான் நான் படத்தை பார்த்தேன் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்பு, மறக்குமா நெஞ்சம் பாடல் ட்ரெண்டாகி இருந்து வந்தது. அதற்கும் ட்ஃப் கொடுக்கும் வகையில், மது ஸ்ரீ குரலில் மல்லி பூ பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி வருகிறது. இந்த ஒரு பாடலே படத்தின் முழு கருத்தையும் தெளிய வைக்கிறது என்றே சொல்லலாம். வெளியூரில் வேலை புரியும் கணவர்களை பிரிந்து வாழும் மனைவிகளுக்கு ஏற்ற பாடலாக இது அமைந்து இருக்கிறது. சிம்பு - சித்தி இட்னானியின் காம்போ இப்பாடலுக்கு உயிரை கொடுத்துள்ளது. ‛எப்போ வரப்போற...’ என தொடங்கும் இந்த பாடலை கேட்பவர்கள், ‛வீடியோ சாங்காக எப்போ வரப்போற...’ என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

மேலும் படிக்க : Vendhu Thanindhathu Kaadu : வாழ்த்து தெரிவித்த கார்த்தி...கார்த்திக்கு பதில் அளித்த கெளதம் மேனன்....!

Engeyum Eppodhum: ‛ஒரு பயணம்... அது தரும் பாடம்...’ 11 ஆண்டு பயணத்தில் ‛எங்கேயும் எப்போதும்’ எச்சரிக்கை!

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola