இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிம்பு கூட்டணியில் இது மூன்றாவது படம். "விண்ணைத்தாண்டி வருவாயா", "அச்சம் என்பது மடமையடா" படங்களின் பட்டியலில் அடுத்து இணைந்துள்ளது "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். இந்தத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.




வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நேற்று (செப்டம்பர்) 15 உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.


 






கௌதம் வாசுதேவ் மேனன் இதுவரை இயக்கிய படத்திலிருந்து தனித்து நிற்கிறது வெந்து தணிந்தது  காடு, ஏனென்றால் பொதுவாகவே கௌதம் மேனன் எடுக்கும் படங்கள் என்றால் பெரும்பாலும் காதல் திரைப்படமாக இருக்கும் இல்லையென்றால் கதாநாயகன் போலீஸாக இருப்பது கதைக்களமாக இருக்கும். இதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு முதன் முறையாக ஒரு கேங்ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன் இதன் காரணமாகவே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.


ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வெந்து தணிந்தது காடு, ஏனென்றால் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படம் என்பதால் சிம்பு ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் நேற்று படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.


 






இந்த நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்"கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலம்பரசனுக்கு வாழ்த்துக்கள் நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை ஆனால் கூடிய சீக்கிரம் பார்ப்பேன் என்று நம்புகிறேன்" என பதிவிட்டு இருந்தார். இதை ரீடுவீட் செய்த கௌதம் மேனன் "நன்றி கார்த்திக் அது மட்டுமல்லாமல் என்னுடைய குருவின் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். செப்டம்பர் 30ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.