ரஹ்மான் - பிரபுதேவா கூட்டணி


ஏ.ஆர் ரஹ்மான்மற்றும் பிரபுதேவாவின் கூட்டணியில் அமைந்த பாடல்களுக்கு எப்போது ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில் இருக்கும் . இசையில் ரஹ்மான்ஒரு பக்கம் தனது சிறந்த இசையை வழங்க அந்த பாடலுக்கு ஏற்ற நடனத்தை வெளிப்படுத்தியவர் பிரபுதேவா. அர்ஜூன் நடித்த ஜெண்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடல் மூலமாக ரஹ்மான்மற்றும் பிரபுதேவா கூட்டணி தொடங்கியது.  பிரபுதேவா நடித்த காதலன் , மிஸ்டர் ரோமியா , லவ் பர்ட்ஸ் , மின்சார கனவு உள்ளிட்ட படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஊர்வசி , முக்காபுலா , ரோமீயோ ஆட்டம்போட்டால் , வெண்ணிலவே , பேட்ட ரேப் , என இந்த இருவரின் காம்பினேஷன் நம் கால்களை தரையில் நிற்க அனுமதிக்காதவை.


குறிப்பாக ரஹ்மான் இசையமைத்த முக்காபுலா பாடல் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது மட்டுமில்லாமல் அந்தப் பாடலில் பிரபுதேவாவின் நடனமும் இன்று வரை ரசிகர்களால் வியந்து பார்க்கப் படுகிறது. 


ஆறாவது முறையாக இணையும் ரஹ்மான் பிரபுதேவா கூட்டணி


தற்போது ஆறாவது முறையாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.  பிஹைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.


கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகிய நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இத்துடன் ரகுமார் மற்றும் பிரபுதேவா செம கூலான லுக்கில் இணைந்து காணப்படும் போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். 






இந்த இருவரின் கூட்டணியில் இந்த முறையும் எந்த மாதிரியான பாடல்கள் உருவாகப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வாமாக காத்திருக்கிறார்கள். சமீப காலங்களில் பிரபு தேவாவின் நடனத்தை ரசிகர்கள் பெரிதாக பார்க்கவில்லை. அவ்வப்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போய் தரிசனம் கொடுத்து வருகிறார் பிரபுதேவா. ஆனால் ரசிகர்கள் அவரை நல்ல கமர்ஷியல் படத்தில் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன. அந்த குறையை இந்த புதுப் படம் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியிடப் பட இருக்கிறது




மேலும் படிக்க : Kavin: நெல்சன் தயாரிப்பில் முதல் ஹீரோவாகக் களமிறங்கும் கவின்? கலக்கல் அப்டேட் இதோ!


Sivaji Ganesan: மாதம் ரூ.250 சம்பளம்.. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவாஜி கணேசனின் கதை!