ஜான்சன் அண்ட் ஜான்சன் துணை நிறுவனத்தின் டால்கம் பவுடர் தயாரிப்புகள், கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய 25 ஆண்டுகால வழக்குகளை முடித்து வைக்க 6.48 பில்லியன் டாலர் தொகையை செலுத்த முன்வந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 5.42 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
வழக்குகளின் பின்னணி என்ன?
பெண் உறுப்புகளின் சுகாதாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பேபி பவுடர்கள் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படலாம். அல்லது மீசோதெலியோமா எனப்படும் நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய் ஏற்படலாம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர்கள் மற்றும் பிற டால்கம் தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதாகவும் அது கேன்சருக்குக் காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உலகம் முழுக்கத் தொடரப்பட்டுள்ளது.
5.42 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த முன்வந்த ஜான்சன் அண்ட் ஜான்சன்
நீண்ட காலமாக சுமார் 25 ஆண்டுகளாக இந்த வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், வழக்குகளை முடித்து வைக்க 6.48 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் முன்வந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 5.42 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
பாதுகாப்பில் சமரசம் செய்யப்படவில்லை
அதே நேரத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், தனது தயாரிப்புகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படவில்லை என்று கூறியதுடன், தமக்கு எதிரான டால்க் தொடர்பான கோரிக்கைகள் எதுவும் தகுதி இல்லாதவை என்பதை மீண்டும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.