Rajini viral video: ரஜினி 170 வது படத்தில் நடித்து வரும் நிலையில் அச்சு அசலாக ரஜினி மாதிரியே இருக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் அண்மையில் ரிலீசாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
தலைவர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் அதை தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினி செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் ரஜினியை போல் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
72 வயதாகும் ரஜினி மேக்கப் மற்றும் விக் இல்லாமல் தோற்றமளிக்கும் அந்த நபர் சாதாரணமாக அரைக்கால் சட்டை, சட்டையுடன் நின்று கொண்டு படப்பிடிப்பு குழுவினரிடம் பேசி கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த புளூ சட்டை மாறன், ”க்ரீன் மேட்ல நடிச்சி, விஷூவல் எஃபெக்ட்ஸ்ல சண்டைபோட்டு 100 கோடி வாங்குகிறார். அவர் பேரு தலைவர். ஆனால், ஒருத்தர் நிஜத்தில் சண்டைப்போட்டு அவுட்டோர் எல்லாம் போய் கஷ்டப்பட்டாலும் அவருக்கு சம்பளம் 10 ஆயிரம் தான். அவருக்கு பேரு டூப்...” என கலாய்ச்சி டிவீட் செய்துள்ளார்.
தலைவர் 170 படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மீண்டும் இணைந்து நடிப்பதாலும், மாமன்னன் படத்தின் மூலம் வில்லனாக கொண்டாடப்பட்ட ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதாலும், பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான ராணா டகுபதி ரஜினி கூட்டணியில் இணைந்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க: பங்காரு அடிகளார் மறைவுக்கு ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்