பங்காரு அடிகளார் மறைவுக்கு ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்

வைரமுத்து இரங்கல் பதிவில், சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர், அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர்” என கூறியுள்ளார். 

Continues below advertisement

Bangaru Adigalar: மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உயிரிழந்த நிலையில் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல்:

நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக பங்காரு அடிகளார் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட் தேச தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக மற்றும் பிற கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் இரங்கல்:

இந்த சூழலில் மறைந்த பங்காரு அடிகளாருக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி இரங்கல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று மலேசியாவில் இருக்கும் இசையமைப்பாளர் தேவா, பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் செங்கல்பட்டிற்கு நேரில் சென்று பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கவிஞர் வைரமுத்து தனது கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர், அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர்” என கூறியுள்ளார். 

இதற்கிடையே செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே வாசன், சிவி சண்முகம், சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும்  மறைந்த பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருவதால் மேல்மருத்துவத்தூரில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க: Bangaru Adigalar: பங்காரு அடிகளார் மறைவு.. கருவறை அருகே கொண்டு செல்லப்படும் உடல்.. மாலை 5 மணிக்கு இறுதிச்சடங்கு..

TN Headlines: பங்காரு அடிகளாருக்கு மக்கள் அஞ்சலி, அரபிக் கடலில் புயல் - இதோ தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்!

Continues below advertisement