96 Re-release: விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் காதலர் தினத்தில் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
96 படம்:
டைம்லெஸ் கிளாசிக் படங்கள் எப்போதும் திரைப்படப் பிரியர்களுக்கான உற்சாக டானிக். படம் வெளியாகி பல வருடங்கள் கடந்தாலும் இந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது அவர்களுக்கு முதல்முறை பார்க்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக, 'காதல் கதைகள்' பார்வையாளர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அந்தக் கதைகளை மீண்டும் பார்வையாளர்களை பார்க்க வைக்கிறது. இந்த வரிசையில் ’ரோமியோ ஜூலியட்’, ‘ரோமன் ஹாலிடே’, ‘டைட்டானிக்’, ‘திவாலே துல்ஹன் லே ஜெயங்கே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற பல திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இந்த வரிசையில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த படம் ‘96’. சி. பிரேம் குமார் இயக்கத்தில் உருவான படம் அனைவரின் இதயங்களிலும் என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் படங்களின் லிஸ்டில் இடம்பெற்றது. ராம், ஜானுவின் அன்பும் காதலும் பார்வையாளர்களின் நினைவுகளை விட்டு அகலாது.
காதலர் தினத்தில் ரீ ரிலீஸ்:
தமிழ் சினிமாவில் ஹிட்டான பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘ராம்-ஜானு’வின் உலகத்தை மீண்டும் பார்ப்பதற்காக ‘96’ படம் மீண்டும் வெளியாகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப ‘96’ திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி 96 படம் வெளியாக உள்ளது. கேஎம் சுந்தரம் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிக திரைகளில் வெளியிட உள்ளன.
96 படத்தில் பள்ளியில் ஒருவரை ஒருவர் காதலிக்கும் ஜானு - ராம் அதன் பிறகு பிரிந்து விடுகின்றனர். அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்போது, நண்பர்களின் முயற்சியால் அதே பள்ளியில் படித்த அனைவரும் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, தனது காதலியான த்ரிஷாவை விஜய் சந்திப்பதும், இருவருக்குமான வசனங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக காட்சிகளை செதுக்கி இருப்பார் இயக்குநர் சி.பிரேம்குமார்.
அனைவரின் மறைந்த போன, ஆழ்மனதில் இருக்கும் பள்ளிக்கால காதலை நினைவுப்படுத்தும் விதமாக 96 படம் இருப்பதால் அதை ரசிககர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் 96 படம் காதலர் தினத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் படிக்க: Vaadivaasal: வாடிவாசல் படத்தில் தனுஷ் ஹீரோவா? சூர்யாவை கழட்டிவிடுகிறாரா வெற்றிமாறன்?
அடுத்த விஜய், அஜித் இவங்களா? 2030இல் கோலிவுட்டை ஆளப்போவது யார்?