தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது இசக்கி எங்கோ நடந்து செல்வதைப் பார்த்த ரமேஷ், சண்முகத்துக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ய, முடியாமல் போகிறது, இசக்கியை காணாமல் வீட்டில் எல்லாரும் பதறிக் கொண்டிருக்க ஷண்முகம் கோயிலுக்கு வந்து “என் தங்கச்சியை என்கிட்டேயே ஒப்படைத்து விடு” என்று வேண்டுகிறான்.
சிவபாலன் இன்னொரு பக்கம் இசக்கியை தேடி செல்ல, ரமேஷ் அவனைப் பார்த்தும் இசக்கி நடந்து போன விஷயத்தை சொல்ல, இவள் கிணத்தில் குதிக்கப் போகும் கடைசி நிமிடத்தில் அங்கு வரும் சிவபாலன் அவளைத் தடுத்து நிறுத்துகிறான். “நீ செத்து போய்ட்டா எல்லா சரியாகிடுமா? அந்த முத்துப்பாண்டி தான் உங்க அக்கா ரத்னாவை விட்டுடுவானா? நீ செத்து சரி செய்யணும்னு நினைக்கிற பிரச்னையை உயிரோட இருந்து சரி செய்” என்று வீட்டுக்கு கூட்டி செல்கிறான்.
வீட்டில் மற்ற சகோதரிகள் இசக்கியை பார்த்து கண்கலங்க, கனி “நீ தற்கொலை பண்ணிக்கிட்டா நானும் அடுத்த நொடியே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போய்டுவேன்” என்று சொல்கிறாள். ஷண்முகம் “இனிமே இப்படி முடிவு எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு, இல்லனா நாங்க எல்லாரும் தற்கொலை செய்து கொள்வேன்” என்று சத்தியம் செய்து இசக்கியை சத்தியம் செய்ய வைக்கிறான்.
அதனைத் தொடர்ந்து ஷண்முகம் எல்லாருக்கும் சாப்பாடு ஊட்டி விட, பரணியும் “எனக்கும் ஊட்டி விடு” என்று ஷண்முகம் கையால் சாப்பிடுகிறாள். மறுநாள் ஷண்முகம் பரணியை கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லும்போது முதல் முறையாக அவன் மீது காதலோடு சாய, ஷண்முகம் “என்ன மயக்கம் வந்துடுச்சா?” என்று கேட்க, இவள் “இல்ல மயங்கிட்டேன்” என்று சொல்கிறாள்.
அடுத்து சண்முகத்தை கோயிலுக்கு கூட்டி வர, அவன் வர மறுக்க, பரணி அவனை கூட்டிச் சென்று இசக்கியை காணும்னு தெரிந்ததும், “நீ இங்க தான் வந்த, எனக்கு அது தெரியும். நீ இங்க வேண்டியதும் தான் அங்க இசக்கி பற்றி சிவபாலனுக்கு தெரிய வந்தது” என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் கழட்டிய சாமிக் கயிற்றை பரணியே கட்டி விடுகிறாள். அடுத்து கிளினிக் வந்து வேலையை முடித்ததும் நேராக சௌந்தராண்டி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.
“கவிதாவோட சாவுக்கு நீங்க தான் காரணம்னு ஒத்துக்கிட்டா முத்துபாண்டியை எதுவும் பண்ண மாட்டேன், இல்லனா கொன்னுடுவேன்” என்று வார்னிங் கொடுத்து அங்கிருந்து கிளம்பி வர, இவர்கள் பயத்தில் நடுங்குகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.