சர்வதேச அளவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை பற்றின தகவல்களை வழங்கும் இணைய தளமாக செயல்பட்டு வருகிறது ஐஎம்டிபி நிறுவனம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொரு பிரிவின் கீழ் டாப் 10 பட்டியலை வழங்கி வருகிறது ஐஎம்டிபி. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான டாப் 10 இந்திய படங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.




முதல் இடத்தில், 8.9 புள்ளிகளை பெற்று, செல்லப்பிராணிகளின் ப்ரியர்களுக்கு பிடித்த 777 சார்லி படம் இடம்பெற்றுள்ளது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 10 ஆம் தேதி வெளியானது.


இரண்டாம் இடத்தில், 8.8 புள்ளிகளை பெற்று மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி தி நம்பி விளைவு என்ற படம் வெளியானது. 25 கோடி பட்ஜெட்டில் தயாரான இது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜூலை 1 ஆம் தேதி வெளியானது.




மூன்றாம் இடத்தில், 8.6 புள்ளிகளை பெற்ற சீதா ராமம் படம் மக்களின் மனதில் காதல் காவியமாக இடம்பெற்றது. துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்த இப்படம் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியானது.அதே புள்ளிகளை பெற்று, காந்தாரா படமும் மூன்றாம் இடத்தை பிடிக்கிறது. ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் வெளிவந்த படம்,எதிர்பாராத வசூலையும், மக்களிடையே நல்ல விமர்சனத்தையும் பெற்றது என்பது குறிப்பிடதக்கது.




அடுத்ததாக 8.4 புள்ளிகளை பெற்ற விக்ரம் மற்றும் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகமும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. மாஸ் கமர்ஷியல் படங்களான இவை, பலத்த எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்து, எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையில் பெரும் சாதனையை படைத்தது. இப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த தகவல்களுக்காக மக்கள் காத்து இருக்கின்றனர்.




8.3 புள்ளிகளை பெற்ற தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. ஒருபக்கம் நல்ல வரவேற்பை பெற்றாலும், மறுபக்கம் பெரும் சிக்கல்களில் மாட்டியது. இது பிரச்சார நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம், என்று சர்வதேச பட திரைப்பட விழாவில் பேசிய இஸ்ரேயல் நாட்டை சேர்ந்த இயக்குநர் ஒருவர் கூறியிருந்தார். அதனால்,இந்தியாவில் அரசியல் ரீதியாக பூகம்பம் வெடித்தது.




அடுத்ததாக 8.2 புள்ளிகளை பெற்ற மேஜர் என்ற மலையாள படம் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து, 8 புள்ளிகளை பெற்ற ஆர் ஆர் ஆர் படம் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.உலகளவில் பெரும் வெற்றியை பெற்ற இது, ஜப்பான் மொழியில் வெளியாகி அங்கும் சக்கை போடு போட்டது. இறுதியாக, 7.9 புள்ளிகளை பெற்ற பொன்னியின் செல்வன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படம், 50 வருட தமிழ் சினிமாவின் கனவை நிறைவேற்றியதுடன் கோடிக்கணக்கில் வசூலை அள்ளி மகத்தான வெற்றியை பெற்றது இந்தப்படம். இந்த படத்தின் அடுத்த பாகம், அடுத்தாண்டில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.