தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்று பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் தான் சத்யராஜ். கோவையைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ், ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அவருக்கு அடியாட்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்திக்கொண்டார்.
அப்படியே பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்போது தான் சத்யராஜ் நடிப்பில் ரிலீசான நூறாவது நாள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த சத்யராஜை, கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாறினார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, கோவையைச் சேர்ந்த மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையோடு வாழ்ந்து வரும் இவர், அரசியல் காட்சிகளில் இல்லாவிட்டாலும் மனதில் பட்ட அரசியல் கருத்தை வெளிப்படையாக கூறி சில விமர்சனங்களுக்கும் ஆளாவர். சத்யராஜை தொடர்ந்து இவருடைய மகன் சிபி ராஜ், தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் இவர் நடித்த ஒரு சில படங்களை தவிர வேறு எந்த படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை.
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதை தாண்டி, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். மகிழ்மதி இயக்கம் என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் பலருக்கு உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சத்யராஜ் 70 வயதை எட்டி விட்டதால், ஹீரோவுக்கு அப்பா, ஹீரோயினுக்கு அப்பா வேடங்களில் நடித்து வருகிறார். சத்யராஜ் இந்தப் படத்திற்கு பிறகு ஹீரோவாகவே நடித்தார். இந்நிலையில் நடிகர் சத்யராஜுக்கு 20 வருட சம்பள பணத்தை மெய்யாக எழுதிய ஒருவரை பற்றிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆம், அவர் வேறு யாருமில்லை, சத்யராஜ் வீட்டில் வேலை பார்த்த நபர் தான். இந்த தகவலை நடிகர் சிவக்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். சத்யராஜ் திருமணத்தின் போது, அவரது வீட்டில் 20 வருடங்களாக வேலை பார்த்து சம்பாதித்த சம்பளத்தை, கருப்பையா அப்படியே மொய் பணமாக எழுதினாராம். இது தான் தனது மனதில் என்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது என்று சிவக்குமார் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.