சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட திமுக வட்ட செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 


இந்த நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக வட்ட செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் சமீனா செல்வம் வெற்றி பெற்றார்.




சென்னை மடிப்பாக்கம் திமுக 188 வது வட்ட செயலாளராக இருந்தவர் செல்வம். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் ஆகிய தொழில்களை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், செல்வத்தின் மனைவிக்கு வாய்ப்பு இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என அரசியல் ரீதியாக இந்த கொலை கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த கொலை தொடர்பாக கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செல்லவத்தின் மனைவி சமீனாவின் வெற்றியை அப்பகுதி திமுகவினர் கொண்டாடி வருகின்றர்.




TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!




தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


TN Urban Election Results: சேலம், விருதுநகர் வார்டுகளில் வெற்றிபெற்று கணவன், மனைவி அசத்தல்.. சுவாரஸ்ய டிட்பிட்ஸ்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண