தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காலை 10 மணி வரை நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அ.தி.மு.க., பா.ஜ.க. நாம் தமிழர், மக்கள்நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.


மாநிலத்தின் முக்கிய நகராட்சிகளான சென்னையில் 200 இடங்களில் 21 இடங்களில் தி.மு.க. கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதுரையில் மொத்தமுள்ள 100 இடங்களில் 10 இடங்களில் தி.மு..க கூட்டணியும், 2 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் 60 இடங்களில் 7 இடங்களில் தி.மு.க. கூட்டணியும், 2 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க.கூட்டணி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


மாநிலம் முழுவதும் உள்ள 138 நகராட்சிகளில் தற்போது வரை 111 நகராட்சிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ம.க. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க., நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.


மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்ற 489 பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணி 254 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 29 இடங்களிலும், பா.ஜ.க. 5 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், நாம் தமிழர் 1 இடத்திலும், அ.ம.மு.க.1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.


TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண