தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


 


இந்நிலையில் கோவை மாநகராட்சியில் இதுவரை திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 காங் 2 சிபிஎம் 1. கோவை மாநாகராட்சியில் அதிமுக இன்னும் வெற்றி கணக்கை துவக்கவில்லை. கோவையில் இதுவரை திமுக பெரிய நெகமம் மற்றும் இடிகரை ஆகிய 2 பேரூராட்சிகள் மற்றும் வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது.




ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!




கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 21 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுக வெற்றி. ஒரு சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் 100 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 26 இடங்களிலும்  , காங்கிரஸ் 4, சுயேச்சை 5, மதிமுக 1, சிபிஎம் 1, தேமுதிக 1, பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 


 


கோவை பேரூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தம் 15 வார்டில் திமுக  13இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் தற்போது வரை  திமுக  3 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


தேர்தலுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியது. இதனால் மீதமுள்ள 802 பதவிகளுக்கு கடந்த 19 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரத்து 366 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 23 இலட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க இருந்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண