TN Urban Election Results 2022 LIVE: அனைத்தையும் கைப்பற்றும் திமுக... எத்தனை இடங்களை பெறப்போகிறது அதிமுக? அப்டேட் இதோ!

TN Urban Local Body Election Results 2022 LIVE: தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் Last Updated: 22 Feb 2022 12:11 PM
கோவை மாநகராட்சி 82 வது வார்டில் திமுக வேட்பாளர் முபசீரா வெற்றி.

திமுக 6167, அதிமுக 1750 - 4417  வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி

கோவை மாநகராட்சி 94-வது வார்டில் திமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி.

திமுக 5100, அதிமுக 2159 : 2911 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி

மக்களுக்கு நன்றி.. வெற்றியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்

திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வென்ற திமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்

திருவண்ணாமலை மறுவாக்குப்பதிவு : சுயேச்சை வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலையில் மறு வாக்குப்பதிவு நடைபெற்ற 25-வது வார்டில் திமுகவை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர்  137 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

TN Urban Election Results 2022 : தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக பெண் வேட்பாளர்... மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுகுணாதேவி 215 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மனைவி தோல்வியடைந்ததை ஏற்கமுடியாத சுகுணாதேவியின் கணவர் நாகராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

16 ஆண்டுகளுக்கு பின் நெல்லை மாநகராட்சியை கைப்பற்றிய திமுக : கொண்டாட்டத்தில் திமுகவினர்

சேலம் மாநகராட்சியில் 19-வது கோட்டத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் தேன்மொழி திமுகவில் இணைந்தார்


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் அவர்களை சந்தித்து திமுகவில் இணைந்தார்.


இதன் காரணமாக எண்ணிக்கையானது, சேலம் மாநகராட்சியில் திமுக கூட்டணி 51, அதிமுக 7, சுயேட்சை 2-ஆக உள்ளது

வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை, பொறுப்புகள் கூடி இருப்பதையே உணர்கிறேன் - முதல்வர் மு.க ஸ்டாலின்

வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை, பொறுப்புகள் கூடி இருப்பதையே உணர்கிறேன் - முதல்வர் மு.க ஸ்டாலின்





கோவை மாநகராட்சி 41-வது வார்டு சி.பி.ஐ வேட்பாளர் சாந்தி வெற்றி

கோவை மாநகராட்சி 41-வது வார்டு சி.பி.ஐ வேட்பாளர் சாந்தி வெற்றி


சி.பி ஐ- 3565


அதிமுக - 1974


1591 வாக்குகள் வித்தியாசத்தில் சி பி.ஐ வேட்பாளர் சாந்தி  வெற்றி

மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் நிலவரம்

மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள்


தற்போது வரை -98 வார்டுகள்


திமுக 66 வார்டுகள் வெற்றி


காங்கிரஸ் 5 வெற்றி


விசிக 1 வெற்றி


சிபிஎம் 4 வெற்றி


மதிமுக 3 வெற்றி


திமுக கூட்டணி 79 வெற்றி


அதிமுக 14 வெற்றி 


பாஜக 1 வெற்றி


சுயேட்சை 4 வெற்றி

கோவை மாநகராட்சி 33 வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி

கோவை மாநகராட்சி 33 வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி



திமுக - 7346
அதிமுக - 3961


3380 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

கோவை மாநகராட்சி 15 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சந்தாமணி வெற்றி

கோவை மாநகராட்சி 15 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சந்தாமணி வெற்றி


காங்கிரஸ்  3452



அதிமுக - 2627



825 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

கோவை மாநகராட்சி 36 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் காயத்ரி வெற்றி

கோவை மாநகராட்சி 36 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் காயத்ரி வெற்றி

கோவை மாநகராட்சி 92-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிச்செல்வன் வெற்றி

அதிமுக வேட்பாளர் செல்லப்பனை விட 456 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி

தாம்பரத்தில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை

தாம்பரம் மாநகராட்சி 47 வார்டு மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை...  அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் அறிவித்துள்ள நிலையில் , தற்பொழுது மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது..

எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி

எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி

சென்னை 141-வது வார்டில் போட்டியிட்ட மறைந்த ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் வெற்றி

கோவில்பட்டி நகராட்சியில் கால் தடம் பதித்தது பாஜக.

கோவில்பட்டி நகராட்சி 20-வது வார்டில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கோவில்பட்டி நகராட்சியில் கால் தடம் பதித்தது பாஜக.

கோவை மாநகராட்சி 42-வது வார்டில், திமுக வேட்பாளர் பிரவீன் ராஜ் வெற்றி..

கோவை மாநகராட்சி 42-வது வார்டில், திமுக வேட்பாளர் பிரவீன் ராஜ் வெற்றி..

“உங்கள் மீது எந்தப் புகாரும் வரக்கூடாது. தொடர்ந்து கண்காணிப்பேன்” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

“உங்கள் மீது எந்தப் புகாரும் வரக்கூடாது. தொடர்ந்து கண்காணிப்பேன். கடந்த 9 மாதகால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்று இந்த வெற்றி” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

கோவை மாநகராட்சி 28 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கண்ணகி ஜோதிபாசு வெற்றி

கோவை மாநகராட்சி 28 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கண்ணகி ஜோதிபாசு வெற்றி


கோவை மாநகராட்சியில் சிபிஎம் போட்டியிட்ட 5 வார்டுகளில் 4 வார்டுகளில் வெற்றி

அதிமுக கோட்டையை தகர்த்த திமுக ; கோவை மாவட்டத்தில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் கைப்பற்றிய திமுக..

அதிமுக கோட்டையை தகர்த்த திமுக ; கோவை மாவட்டத்தில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் கைப்பற்றிய திமுக..





அதிமுக கோட்டையை தகர்த்த திமுக ; கோவை மாவட்டத்தில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் கைப்பற்றிய திமுக..

அதிமுக கோட்டையை தகர்த்த திமுக ; கோவை மாவட்டத்தில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் கைப்பற்றிய திமுக..





அதிமுக கோட்டையை தகர்த்த திமுக ; கோவை மாவட்டத்தில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் கைப்பற்றிய திமுக..

அதிமுக கோட்டையை தகர்த்த திமுக ; கோவை மாவட்டத்தில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் கைப்பற்றிய திமுக..





ஈரோடு மாநகராட்சி மொத்தம் 60 வார்டுகள் : முடிவு தெரிந்தவை - 58

ஈரோடு மாநகராட்சி மொத்தம் 60 வார்டுகள்


முடிவு தெரிந்தவை - 58


திமுக- 42


காங்கிரஸ் - 3


மதிமுக-1    


அதிமுக - 6


சுயேட்சை - 6

வெற்றிபெற்ற அடுத்த நொடி... அதிமுகவில் இருந்த வேட்பாளர் திமுகவில் இணைந்தாப்டி...! யார் தெரியுமா?

ஆவடி மாநகராட்சி 14-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேஷ் குமார் திமுகவில் இணைந்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை நிறைவு...

காஞ்சிபுரம்.


நகர்புற உள்ளாட்சி தேர்தல்


காஞ்சிபுரம் மாநகராட்சி 50வார்டுகள் வெற்றி விபரம் 



1வது வார்டு திமுக வேட்பாளர் அஸ்மா பேகம் வெற்றி


2வது வார்டு  திமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி


3வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜோதிலட்சுமி வெற்றி 


4வது வார்டு திமுக வேட்பாளர் நிர்மலா வெற்றி


5வது வார்டு திமுக வேட்பாளர் இலக்கியா சுகுமார் வெற்றி


6வது வார்டு திமுக வேட்பாளர் பிரியா குழந்தைவேலு வெற்றி


7வது  வார்டு திமுக வேட்பாளர் சித்ரா வெற்றி


8வது வார்டு திமுக வேட்பாளர் சூர்யா சோபன் குமார் வெற்றி


9வது வார்டு  திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி 


10வது வார்டு பாமக வேட்பாளர் சரஸ்வதி சண்முகம் வெற்றி 


11 வது வார்டு  அதிமுக வேட்பாளர் குட்டி என்கிற சண்முகநாதன் வெற்றி


12வது வார்டு திமுக வேட்பாளர் தேவராஜன் வெற்றி


13வது வார்டு திமுக வேட்பாளர்  சரஸ்வதி பாலமுருகன் வெற்றி


14 வார்டு திமுக வேட்பாளர் குமரவேல் வெற்றி 


15வது வார்டு அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ்  வேட்பாளர் மெளலி சசிகுமார்  வெற்றி


16வது வார்டு சுயேட்சை வேட்பாளர்  சாந்தி துரைராஜ் வெற்றி


17வது வார்டு திமுக வேட்பாளர் சசிகலா வெற்றி 


18வது வார்டு திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன் வெற்றி


19வது வார்டு திமுக வேட்பாளர் கௌதமி வெற்றி


20வது வார்டு  அதிமுக வேட்பாளர் அகிலா தேவதாஸ்  வெற்றி


21வது  வார்டு பிஜேபி வேட்பாளர் விஜிதா அருண்பாண்டியன் வெற்றி


22வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் குமரகுரு நாதன் வெற்றி


23வது வார்டு  அதிமுக  வேட்பாளர் புனிதா சம்பத்  வெற்றி 


24வது வார்டு திமுக வேட்பாளர் சர்மிளா சத்தியமூர்த்தி வெற்றி 


25வது வார்டு  திமுக வேட்பாளர் சந்துரு வெற்றி


26வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி


27வது வார்டு சுயேட்சை வேட்பாளர்  ஷாலினி வேலு  வெற்றி


28 வார்டு திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வெற்றி 


29வது வார்டு திமுக வேட்பாளர் குமரன் வெற்றி


30வது வார்டு  திமுக வேட்பாளர்  சுரேஷ் வெற்றி


31வது வார்டு சுயேட்சை வேட்பாளர் இந்திரா வெற்றி 


32வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி சீனிவாசன் வெற்றி


33வது வார்டு திமுக வேட்பாளர் ஷோபனா கண்ணன் வெற்றி


34வது வார்டு திமுக வேட்பாளர் பிரவீன் குமார் வெற்றி


35வது  வார்டு திமுக வேட்பாளர் ரமணி பொன்னம்பலம் வெற்றி


36வது வார்டு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது


37வது வார்டு  அதிமுக வேட்பாளர்  வேலரசு வெற்றி 


38வது வார்டு திமுக  வேட்பாளர் சரளா  சண்முகம் வெற்றி 


39வது வார்டு  சுயேட்சை வேட்பாளர் அன்பழகன் வெற்றி


40வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பானுப்பிரியா சிலம்பரசன் வெற்றி


41வது வார்டு அதிமுக வேட்பாளர்   சிந்தன்  நான்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி


42வது வார்டு பாமக வேட்பாளர் சூர்யா தர்மராஜ்  வெற்றி 


43வது வார்டு திமுக வேட்பாளர் மோகன் வெற்றி


44வது வார்டு திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி 


45வது வார்டு அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி 


46வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கயல்விழி வெற்றி 


47 வது வார்டு அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 


48வது வார்டு திமுக வேட்பாளர் கார்த்தி வெற்றி 


49வது வார்டு திமுக வேட்பாளர் பூங்கொடி தசரதன் வெற்றி 


50வது வார்டு திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி


51வது வார்டு திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி 



மொத்தம் 51 வார்டுகள்


தேர்தல் தள்ளி வைப்பு - 1வார்டு (36வது வார்டு)


தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வார்டுகள் -50



திமுக + கூட்டனி 
32 வெற்றி
அதிமுக + கூட்டனி
9 வெற்றி
பா.ஜ.க 1 வெற்றி
பா.ம.க 2 வெற்றி
சுயேச்சை 6 வெற்றி


Total. 50

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொகுதியில் திமுக அபார வெற்றி ; அதிமுக படுதோல்வி

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொகுதியில் திமுக அபார வெற்றி ; அதிமுக படுதோல்வி

மேலூரில் வெற்றி பெற்ற சில நிமிடங்களில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அருண் சுந்தர பிரபு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். வெற்றி பெற்ற சில நிமிடங்களில் அதிமுகவைச் சேர்ந்த அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்து மேலூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் ஜவஹர்லால் நேரு தோல்வி

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

சிதம்பரம் நகராட்சியை கைப்பற்றிய திமுக

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 31 இடங்களில் திமுக வெற்றி 

பாடகர் கானா பாலா தோல்வி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் 72ஆவது வார்டில் போட்டியிட்ட பாடகர் கானா பாலா தோல்வி  

வெற்றி பெற்ற உடன் திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேஷ் , திமுக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர்  நாசரை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.


 

Nellai Election Results 2022 | டெப்பாசிட் இழந்த பாஜக

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் விக்ரமசிங்கபுரம் நகராட்சிகளில் தலா எட்டு இடங்கள் என 16 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 14 இடங்களில் வைப்புத்தொகை டெபாசிட்டை இழந்தது

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி


பேரூராட்சிகளில் திமுக கூட்டணி 367 இடங்களை அமோக வெற்றி


நெல்லை மாவட்டம் முக்கூடல்  பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள்

நெல்லை மாவட்டம் முக்கூடல்  பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள்


திமுக : 11
பாஜக : 2
சுயேட்சை : 2

செங்கல்பட்டு : பாஜகவுக்கு ஒரே ஓட்டு

செங்கல்பட்டு நகராட்சி 9-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லோகேஷ் கண்ணன் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார்.

கெத்துகாட்டிய ஒவைசி வெற்றி வேட்பாளர் நபிலா.. திருப்பத்தூரில் ஓரங்கட்டப்பட்ட பிற வேட்பாளர்கள்..

கெத்துகாட்டிய ஒவைசி வெற்றி வேட்பாளர் நபிலா.. திருப்பத்தூரில் ஓரங்கட்டப்பட்ட பிற வேட்பாளர்கள்..

சேலம் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

சேலம் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக


இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டவை


38/60


திமுக 32 +


அதிமுக 4


சுயேச்சை 2

முடிந்தது மணப்பாறை நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி

மணப்பாறை நகராட்சி ‌மொத்தமுள்ள 27 வார்டுகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது 


அதிமுக.   - 11
திமுக.        - 8
சுயேட்சை  -5
காங்கிரஸ். -1
இந்திய கம்யூனிஸ்ட் -2 


வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது சட்டக் கல்லூரி மாணவி யாஷ்வினி வெற்றி


Salem Election Results 2022 | சேலம் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக

60 வார்டுகளை கொண்ட சேலம் மாநகராட்சியை 31 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 35 வார்டுகளுக்கான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட நிலையில் 3 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர். 



விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி 6-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வி


Theni Election Results 2022 | கம்பம் நகராட்சியை கைப்பற்றிய திமுக

தேனி மாவட்டத்தில் 33 வார்டுகளை கொண்ட கம்பம் நகராட்சியை 26 வார்டுகளில் வென்று திமுக கைப்பற்றி உள்ளது.  அதிமுக 7 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

Coimbatore Election Results 2022 | கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது

கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை, மேட்டுப்பாளையம், கூடலூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, மதுக்கரை, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகளையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றி உள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 198 நகராட்சி கவுன்சிலர் இடங்களில் இதுவரை திமுக 149 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை அதிமுக 18 இடங்களிலும், சுயேச்சை 7, காங்கிரஸ் 4, சிபிஎம் 1, மதிமுக 1, பாஜக 1 இடங்களில் வெற்றி



Kanchipuram Election Results 2022 | காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் வெற்றி

காஞ்சிபுரம் மாநாகராட்சிக்கு உட்பட்ட 21 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் விஜிதா அருண்பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். 



 

சென்னை 136 வது மாநகராட்சி வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி, 2வது இடத்தை பிடித்தது விஜய் மக்கள் இயக்கம்


Mayiladuthurai Election Results 2022 | மயிலாடுதுறை நகராட்சியை கைப்பற்றிய திமுக

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டுகளில் திமுக 16 வார்டுகளும் , அதிமுக 6 வார்டும், காங்கிரஸ், மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தல 1 வார்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு , வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய  4 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது

Nellai Election Results 2022 | ஒரு ஓட்டு கூட வாங்காத அமமுக வேட்பாளர்

நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் பேரூராட்சி 4வது வார்டு அமமுக வேட்பாளர் ரமேஷ் கண்ணன் ஒரு வாக்கு கூட பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளார்.   வேட்பாளராக போட்டியிட்ட ரமேஷ் கண்ணன் உட்பட அவரது குடும்பத்தார் யாரும் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



ஆரணி நகராட்சியில் போட்டியிட்ட 21 வயது திமுக வேட்பாளர் ரேவதி வெற்றி


சென்னையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய விஜய் மக்கள் இயக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 136ஆவது வார்டில் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்ற நிலையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 


வாக்குகள் நிலவரம்:- 


திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் - 7,222


விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் அறிவுச் செல்வி - 5,112


அதிமுக வேட்பாளர் லஷ்மி கோவிந்தசாமி - 1,137


பாமக வேட்பாளர் சாந்தி - 58


நாதக வேட்பாளர் அனிஷ் பாத்திமா-930


மநீம வேட்பாளர் கெளரி - 191


பாஜக வேட்பாளர் சுதா - 546

Salem Election Results 2022 | சேலம் மாநகராட்சியில் போட்டியிட்ட தாய், மகள் வெற்றி

சேலம் மாநகராட்சியில் திமுக சார்பில் 41 ஆவது வார்டில் போட்டியிட்ட பூங்கொடி மற்றும் 54வது வார்டில் போட்டியிட்ட பூங்கொடியின் மகள் கனிமொழி வெற்றி பெற்றுள்ளனர்

Coimbatore Election Results 2022 | கோவை கண்ணம்பாளையம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

கோவை மாவட்டத்திற்குட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள  மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. 2 இடங்களில் சுயேட்சையும், 1 இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளனர். 

Coimbatore Election Results 2022 |கோவை கண்ணம்பாளையம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள  மொத்தமுள்ள 15 வார்டுகளில்.,
 12 இடங்களில் திமுக வெற்றி. 
2 இடங்களில் சுயேட்சையும், .
1 இடத்தில் அதிமுக வும் வெற்றி.

Karur Election Results 2022 | கரூர் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக

கரூர் மாநகராட்சியை அதிக பெரும்பான்மையுடன் தற்போது திமுக கைப்பற்றியுள்ளது. கரூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில், திமுக 25 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், அதிமுக 2 வார்டுகளிலும்,   சுயேட்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் கரூர் மாநகராட்சியில் தற்போது திமுக 25 வார்டுகளிலும், திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 2 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளதால் கரூர் மாநகராட்சியின் திமுகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது.

பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக VS பாஜக

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக 7 இடங்களிலும் பாஜக 7 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் நகராட்சியை கைப்பற்றுவதில் சுயேட்சைகளின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது

Trichy Election Results 2022 | திருச்சி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி

65 வார்டுகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில் 33 வார்டுகளில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது:- 


திமுக- 24
காங்கிரஸ்- 4
மதிமுக- 2
சிபிஐ-1
சிபிஎம்-1
விசிக-1


அதிமுக- 1
அமமுக-1

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர்- குச்சனூர் பேரூராட்சியில் ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை


Thiruvannamalai Election Results 2022 | ஆரணியில் கவுன்சிலரான 2K KID

ஆரணி நகராட்சிக்கு உட்பட 20ஆவது வார்டில் திமுக வேட்பாளராக களம் இறங்கிய 21 வயது நிரம்பிய 2k kid ரேவதி வெற்றி 


கன்னியாகுமரி: மருங்கூர் பேரூராட்சி 10-வது வார்டில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் சகாய ஜெமிலா வெற்றி


சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட திமுக வட்ட செயலாளார் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி


Theni Election Results 2022 | முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் சொந்த ஊரில் திமுக முன்னிலை

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் நகராட்சியில் திமுக முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் இதுவரை 10 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதில் திமுக 5 இடங்களிலும் அதிமுக, அமமுக தலா 2 இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி 

Villupuram Election Results 2022 | திண்டிவனம் நகராட்சியை கைப்பற்றிய திமுக

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 23 வார்டுகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் பாமக 2 வார்டிலும் விசிக ஒரு வார்டிலும் வெற்றி 

Coimbatore Election Results 2022 | கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், திமுக 6 வார்டுகளிலும்,  சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 4வது வார்டு பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி


123 நகாராட்சிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி


Coimbatore Election Results 2022 | பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றிய திமுக

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக இதுவரை 23 வார்டுகளில் பெற்ற நிலையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 3 நகராட்சிகளை திமுக கைப்பற்றி உள்ளது

Thoothukudi Election Results 2022 | திருச்செந்தூர் நகராட்சியை கைப்பற்றிய திமுக

முதல்முறையாக நகராட்சி தேர்தலை சந்தித்த திருச்செந்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 27 வார்டுகளில் 21 இடங்களில் - திமுகவும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர் 


திருச்செந்தூர் நகராட்சி தேர்தல் முடிவுகள்:- 


1ஆவது வார்டு - ரமேஷ் - திமுக 


2ஆவது வார்டு - செந்தில்குமார் - திமுக


3ஆவது வார்டு - அந்தோணி ரூபன் சோ - திமுக


4ஆவது வார்டு - தினேஷ் கிருஷ்ணா - திமுக


5ஆவது வார்டு - சுதாகர் - திமுக 


6ஆவது வார்டு - சூரியகலா சுயேட்சை 


7ஆவது வார்டு - கெளரி - திமுக 


8ஆவது வார்டு - கிருஷ்ணவேணி-காங்கிரஸ்


9ஆவது வார்டு -கண்ணன் - திமுக


10ஆவது வார்டு - அர்ச்சனா-சுயேட்சை


11ஆவது வார்டு - ராமன் - திமுக


12ஆவது வார்டு - சாரதா - திமுக


13ஆவது வார்டு - முத்துக்குமார் - திமுக


14ஆவது வார்டு -ரேவதி - திமுக


15ஆவது வார்டு -சோமசுந்தரி - திமுக


16ஆவது வார்டு - ஆனந்த ராமச்சந்திரன் - திமுக


17ஆவது வார்டு - வேலம்மாள்  - அதிமுக


18ஆவது வார்டு - ஆறுமுகம் - திமுக


19ஆவது வார்டு - மகேந்திரன் - திமுக


20ஆவது வார்டு -முத்து ஜெயந்தி - திமுக


21ஆவது வார்டு -முத்துகிருஷ்ணன் - திமுக


22ஆவது வார்டு -லிங்க செல்வி-சுயேட்சை 


23ஆவது வார்டு -சாந்தி - அதிமுக


24ஆவது வார்டு -சிவ ஆனந்தி - அதிமுக


25ஆவது வார்டு -செல்வி - திமுக


26ஆவது வார்டு - மஞ்சுளா - திமுக


27ஆவது வார்டு -லீலா - திமுக 


 

Tirunelveli Election Results 2022 | திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக முன்னிலை

55 வார்டுகளை கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியில் 14 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு, அதிமுக 2 இடங்களிலும், மதிமுக, சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி 


 

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றுகிறது திமுக கூட்டணி


Cuddalore Election Results 2022 | விருத்தாசலம் நகராட்சி வெற்றி நிலவரம்

விருத்தாசலம் நகராட்சி வெற்றி நிலவரம்:-


1ஆவது வார்டு -திமுக
2ஆவது வார்டு -தேமுதிக
3ஆவது வார்டு -தேமுதிக
4ஆவது வார்டு -சுயேட்சை
5ஆவது வார்டு -  அதிமுக
6ஆவது வார்டு - பாமக
7ஆவது வார்டு - திமுக
8ஆவது வார்டு - திமுக
9ஆவது வார்டு - திமுக


10ஆவது வார்டு - அதிமுக
11ஆவது வார்டு - திமுக
12ஆவது வார்டு - திமுக
13ஆவது வார்டு - சுயேச்சை
14ஆவது வார்டு - திமுக
15ஆவது வார்டு - திமுக
16ஆவது வார்டு - திமுக
17ஆவது வார்டு - திமுக
18ஆவது வார்டு - திமுக
19ஆவது வார்டு  - திமுக
20ஆவது வார்டு - திமுக
21ஆவது வார்டு - அதிமுக
22ஆவது வார்டு - திமுக
23ஆவது வார்டு - அதிமுக

பாஜக முகவரால் ஹிஜாபை அகற்ற சொன்ன மேலூர் நகராட்சி 8வது வார்டில் திமுக வேட்பாளர் முகமது யாசின் வெற்றி


Thoothukudi Election Results 2022 | தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி

தூத்துக்குடி மாநகராட்சி 


1 வது வார்டு - திமுக வெற்றி 
2 வது வார்டு -   சுயேட்சை வேட்பாளர் வெற்றி
3 வது வார்டு -  திமுக வெற்றி
4 - வது வார்டு  - திமுக வெற்றி
5- வது வார்டு  - திமுக வெற்றி
6வது வார்டு  - திமுக வெற்றி
7 வது வார்டு  - திமுக வெற்றி
8 வது வார்டு  - திமுக வெற்றி
9 வது வார்டு  - திமுக வெற்றி
10 வது வார்டு  - அதிமுக வெற்றி
11வது வார்டு  - காங்கிரஸ் வெற்றி
12 வது வார்டு  - திமுக வெற்றி
13வது வார்டு  - திமுக வெற்றி
14 வது வார்டு  - சுயேட்சை வேட்பாளர்  வெற்றி
15 வது வார்டு - திமுக வெற்றி 
16வது வார்டு - திமுக வெற்றி 
17 வது வார்டு -   திமுக வெற்றி
18 வது வார்டு -  திமுக வெற்றி
19 வது வார்டு  - திமுக வெற்றி
 20 வது வார்டு  - திமுக வெற்றி
21 வது வார்டு  - திமுக வெற்றி
22 வது வார்டு  - திமுக வெற்றி
23 வது வார்டு  - கம்யூனிஸ்ட் வெற்றி
24 வது வார்டு  - திமுக வெற்றி
25 வது வார்டு  - காங்கிரஸ் வெற்றி
26வது வார்டு  - திமுக வெற்றி
27 வது வார்டு  - திமுக வெற்றி
29 வது வார்டு  - திமுக வெற்றி
30 வது வார்டு  - திமுக வெற்றி
31வது வார்டு   - திமுக வெற்றி
32 வது வார்டு - திமுக வெற்றி 
33 வது வார்டு -    திமுக வெற்றி
34 வது வார்டு -  காங்கிரஸ் வெற்றி
35 - வது வார்டு  - அதிமுக வெற்றி
36- வது வார்டு  -  திமுக வெற்றி
37வது வார்டு  - சுயேட்டை வேட்பாளர் 
வெற்றி
38வது வார்டு  -  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி
39 வது வார்டு  -  திமுக வெற்றி
40 வது வார்டு  -  திமுக வெற்றி
41 வது வார்டு  -  திமுக வெற்றி
42வது வார்டு  - திமுக வெற்றி
43 வது வார்டு  - CPM வெற்றி
44 வது வார்டு  - சுயேட்சை வேட்பாளர்  வெற்றி
45 வது வார்டு  -  திமுக வெற்றி

Kanchipuram Election Results 2022 | காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக முன்னிலை

காஞ்சிபுரம் மாநகராட்சி வெற்றி நிலவரம்:-


1வது வார்டு திமுக வேட்பாளர் அஸ்மா பேகம் வெற்றி


2வது வார்டு  திமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி


4வது வார்டு திமுக வேட்பாளர் நிர்மலா வெற்றி


6வது வார்டு திமுக வேட்பாளர் பிரியா குழந்தைவேலு வெற்றி


7வது  வார்டு திமுக வேட்பாளர் சித்ரா வெற்றி


8வது வார்டு திமுக வேட்பாளர் சூர்யா சோபன் குமார் வெற்றி


9வது வார்டு  திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி 


10வது வார்டு பாமக வேட்பாளர் சரஸ்வதி சண்முகம் வெற்றி 


11 வது வார்டு  அதிமுக வேட்பாளர் குட்டி என்கிற சண்முகநாதன் வெற்றி


12வது வார்டு திமுக வேட்பாளர் தேவராஜன் வெற்றி


13வது வார்டு திமுக வேட்பாளர்  சரஸ்வதி பாலமுருகன் வெற்றி


14 வார்டு திமுக வேட்பாளர் குமரவேல் வெற்றி 


திமுக -10 வெற்றி 
அதிமுக- 1 வெற்றி
பாமக -1 வெற்றி

எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர் 23-வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி


கரூர் புலியூர் பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் 6 வார்டு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இன்னும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உடன் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது வாக்கு எண்ணிக்கை  ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது

Coimbatore Election Results 2022 | கோவை மாநகராட்சியில் முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக

100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் அதிமுக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அக்கட்சியின் மேயர் வேட்பாளராக அறியப்பட்ட ஷர்மிளா சந்திரசேகர் வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் மாநகராட்சியில் திமுக முன்னிலை - தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள் 2 பேர் வெற்றி

கடலூர் முதல் மாநகராட்சி தேர்தலில் 16 வார்டுகளுக்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  திமுக 11 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 

Thiruvannamalai Election Results 2022 | சுயேச்சைகளின் ராஜ்ஜியமான வந்தவாசி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 10 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே கைப்பற்றி உள்ளது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது. திமுக 8 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும் பாமக 2 வார்டுகளிலும், முஸ்லிம் லீக் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
 

திமுக வேட்பாளரை 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரி வெற்றி


Coimbatore Election Results 2022 | கோவை மாநகராட்சியில் வெற்றி கணக்கை தொடங்காத அதிமுக

100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி இதுவரை 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக 13 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், சிபிஎம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு இடத்தில் கூட அதிமுக இன்னும் ஒரு வெற்றி கணக்கை பதிவு செய்யவில்லை



சென்னை மாநகராட்சி 136-வது வார்டில் 23 வயது திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி


Salem Election Results 2022 | எடப்பாடி நகராட்சியில் திமுக முன்னிலை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி நகராட்சியில் 8 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகளுக்கான வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு வெற்றிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக 5 இடங்களில் வெற்றி 

Kanchipuram Election Results 2022 | காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக முன்னிலை

50 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில்  8 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 


வெற்றி நிலவரம்:-  


2 வது வார்டு- திமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி


8வது வார்டு-திமுக வேட்பாளர் சூர்யா சோபன் குமார் வெற்றி


13வது வார்டு-திமுக வேட்பாளர்  சரஸ்வதி பாலமுருகன் வெற்றி


7வது  வார்டு-திமுக வேட்பாளர் சித்ரா வெற்றி


1வது வார்டு-திமுக வேட்பாளர் அஸ்மா பேகம் வெற்றி


6வது வார்டு-திமுக வேட்பாளர் பிரியா குழந்தைவேலு வெற்றி


4வது வார்டு-திமுக வேட்பாளர் நிர்மலா வெற்றி


9வது வார்டு-திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி


11 வது வார்டு- அதிமுக வேட்பாளர் குட்டி என்கிற சண்முகநாதன் வெற்றி

Madurai Election Results 2022 | மதுரை மாநகராட்சியில் திமுக முன்னிலை

100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் இதுவரை 29 வார்டுகளில் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திமுக  16 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் 2 வார்டுகளிலும் விசிக, பாஜக ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


 

திருவண்ணாமலை நகராட்சி: திமுக 6 அதிமுக 2 வெற்றி !

திருவண்ணாமலை நகராட்சி


1 வார்டு  கோவிந்தன் திமுக


2 வார்டு ஆண்டாள் செல்வராஜ் திமுக


3. வார்டு சீனிவாசன் திமுக


4. வார்டு ராணி முருகன் மதிமுக


5. வார்டு சிவில் சீனிவாசன் அதிமுக


6. வார்டு நரேஷ்  அதிமுக 


7. வார்டு செந்தில் திமுக


8 வார்டு ராஜாத்தி விஜயராஜ் திமுக


 

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி


சென்னை 49வது வார்டில் திமுக வேட்பாளர் இளைய அருணா வெற்றி


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது


Chennai Election Results 2022 | சிவகாமி ஐ.ஏ.எஸை தோற்கடித்த பரிதி இளம் சுருதி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 99ஆவது வார்டில் அதிமுக கூட்டணி சார்பில் களம் இறங்கிய சமூகசமத்துவப்படையின் சிவகாமி ஐ.ஏ.எஸை தோற்றக்கடித்து திமுக வேட்பாளர் பரிதி இளம் சுருதி 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.



Coimbatore Election Results 2022 | கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 27 வார்டுகளை கொண்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் 14 வார்டுகளில் திமுக  வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதன் முறை உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ள கருமத்தம்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை திமுக வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய 2 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது.

வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி


Salem Election Results 2022 | எடப்பாடி நகராட்சியில் அதிமுக முன்னிலை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் 5 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. தொடந்து அதிமுக முன்னிலை வகித்து வருகிறது



Salem Election Results 2022 | சேலம் மாநகராட்சியில் 8 இடங்களில் திமுக வெற்றி

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியில் திமுக கூட்டணி முன்னிலை. திமுக கூட்டணி  8 இடங்களிலும், அதிமுக மற்றும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி

கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் 100 இடங்களில் திமுக வெற்றி


Vellore Election Results 2022 | வேலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற திருநங்கை

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 ஆவது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்



Coimbatore Election Results 2022 | கோவை மாவட்டத்தில் 3 பேரூராட்சி ஒரு நகராட்சியை கைப்பற்றிய திமுக

கோவை மாவட்டத்திற்குட்பட்ட பேரூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தம் உள்ள 15 வார்டில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், திமுக இதுவரை 3 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது

Thiruvannamalai Election Results 2022 | வேட்டவலம் பேரூராட்சியை வேட்டை ஆடிய திமுக

திருவண்ணாமலை மாவட்டம் உள்ள 15 வார்டுகளை கொண்ட வேட்டவலம் பேரூராட்சியில் 8 வார்டுகளை கைப்பற்றி திமுக வெற்றி, அதிமுக 5 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி 

Cuddalore Election Results 2022 | விருத்தாசலம் நகராட்சியை கைப்பற்றிய திமுக

விருத்தாசலம் நகராட்சி வெற்றி நிலவரம்:-


1ஆவது வார்டு -திமுக
2ஆவது வார்டு -தேமுதிக
3ஆவது வார்டு -தேமுதிக
4ஆவது வார்டு -சுயேட்சை
5ஆவது வார்டு -  அதிமுக
6ஆவது வார்டு - பாமக
7ஆவது வார்டு - திமுக
8ஆவது வார்டு - திமுக
9ஆவது வார்டு - திமுக
10ஆவது வார்டு - அதிமுக
11ஆவது வார்டு - திமுக
12ஆவது வார்டு - திமுக
13ஆவது வார்டு - சுயேச்சை
14ஆவது வார்டு - திமுக
15ஆவது வார்டு - திமுக
16ஆவது வார்டு - திமுக
17ஆவது வார்டு - திமுக
18ஆவது வார்டு - திமுக
19ஆவது வார்டு  - திமுக

திருச்சி மாநகராட்சி 27 வார்டில் மேயர் வேட்பாளராக அறியப்படும் திமுகவின் மு.அன்பழகன் வெற்றி


Coimbatore Election Results 2022 | கோவை மாவட்டத்தில் 100 பேரூராட்சி வார்டுகளில் திமுக வெற்றி

கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் 100 வார்டுகளில் திமுக வெற்றி, அதிமுக 26 இடங்களிலும் , காங்கிரஸ் 4 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும்,  மதிமுக, சிபிஎம், தேமுதிக தலா ஒரு இடத்திலும் வெற்றி 

சென்னை மாநகராட்சியில் 11 வார்டுகளில் திமுக வெற்றி


அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி

கோவை மாநகராட்சி 7 வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி

Tirupur Election Results 2022 |காங்கேயம் நகராட்சியை கைப்பற்றிய திமுக

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி வெற்றி நிலவரம்:- 


வார்டு 1 : திமுக , சூர்யபிரகாஷ்


வார்டு 2 : அதிமுக , ரகத்துல்லா 


வார்டு 3 : திமுக-ஜெயசித்ரா


வார்டு 4 : திமுக-இப்ராஹிம்


வார்டு 5 : திமுக-மீனாட்சி 


வார்டு 6 : திமுக-ராஜாத்தி 


வார்டு 7 : திமுக-கவிதா 


வார்டு 8 : திமுக-வளர்மதி


வார்டு 9 : அதிமுக-துரைசாமி 


வார்டு 10 : காங்கிரஸ்-ஹேமலதா


வார்டு 11 : அதிமுக- அருண்குமார்


வார்டு 12 : நித்யா-சுயேட்சை


வார்டு 13 : திமுக-சிலம்பரசன்


வார்டு 14 : அதிமுக-சிவரஞ்சனி 


வார்டு 15 : சுயேட்சை 


வார்டு 16 : திமுக-கமலவேணி


வார்டு 17 : சுயேட்சை-சோபனா


வார்டு 18 : திமுக- வாணி

Thiruvannamalai Election Results 2022 | சுயேச்சைகள் மாஸ் காட்டும் வந்தவாசி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி வெற்றி விவரம்:-


1வது வார்டு- அதிமுக, 
2வது வார்டு- சுயேச்சை 
3வது வார்டு- சுயேச்சை
4வது வார்டு- சுயேச்சை
5வது வார்டு- சுயேச்சை
6வது வார்டு- சுயேச்சை
7வது வார்டு- பாமக, 
8வது வார்டு- திமுக

Kanchipuram Election Results 2022 |வாலாஜாபாத் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியை  திமுக கைப்பற்றி உள்ளது. இதுவரை திமுக 8 வார்டுகளிலும் அதிமுக 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியை பொறுத்தவரை 40 ஆண்டுகளாக திமுக தொடர்ந்து  வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி வந்த நிலையில்  கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக முதல் முறையாக கைப்பற்றியிருந்தது.

Coimbatore Election Results 2022 | கோவை பெரிய நெகமம் பேரூராட்சியை மொத்தமாக தூக்கிய திமுக

கோவை மாவட்டத்திற்க் உட்பட்ட பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி வெற்றி. ஒரு வார்டில் மட்டும் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்

Valankaimaan Municipal Election Results 2022 : வலங்கைமான் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

வலங்கைமான் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. அதிக இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது

Coimbatore Election Results 2022 | கோவை மாநகராட்சியில் வெற்றி கணக்கை தொடங்காத அதிமுக - கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி

கோவை மாநகராட்சி 7 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி பெற்றுள்ளார்.




கோவை மாநகராட்சி வெற்றி நிலவரம்:-


திமுக-3
காங்கிரஸ்-2
சிபிஎம்-1


பிரதான எதிர்கட்சியான அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றி கணக்கை தொடங்கவில்லை

உள்ளாட்சி தேர்தல்: பேரூராட்சிகளில் 223 இடங்களில் திமுக வெற்றி


Coimbatore Election Results 2022 | கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளிலும் திமுக முன்னிலை

கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 


பேருராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்


திமுக-38 


அதிமுக-17


தேமுதிக-1 


மதிமுக-1


காங்கிரஸ்-1


சுயேச்சை-4 இடங்களில் வெற்றி

Coimbatore Election Results 2022 | எஸ்.பி வேலுமணி தொகுதியில் திமுக அபார வெற்றி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி வருகிறது 


வெற்றி நிலவரம்:-



  • தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் வெற்றி அறிவிக்கப்பட்ட 6 வார்டுகளில் 5 வார்டுகளில் திமுக வெற்றி

  • வேடபட்டி பேரூராட்சியில் வெற்றி அறிவிக்கப்பட்ட 6 வார்டுகளில் 4 வார்டுகளில் திமுக வெற்றி

  • தாளியூர் பேரூராட்சியில் வெற்றி அறிவிக்கப்பட்ட 6 வார்டுகளில் 5 இடங்களில் திமுக வெற்றி

  • பேரூர் பேரூராட்சியில் வெற்றி அறிவிக்கப்பட்ட 8 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுக வெற்றி

புதுக்கோட்டை நகராட்சியில் 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றி


கோவை மாநகராட்சியில் 4ஆவது வெற்றியை பதிவு செய்த திமுக கூட்டணி

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 100 வார்டுகளில் 2 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்ற நிலையில்  13 வது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுமதி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Coimbatore Election Results 2022 | கோவை மாநகராட்சியில் 3 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி

கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 2 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது

உள்ளாட்சி தேர்தல்: காலை 9.30 மணி நிலவரப்படி நகராட்சிகளில் 70 இடங்களில் திமுக வெற்றி


Kovilpatti Municipality Corporation Election Result | கோவில்பட்டி நகராட்சியில் வெற்றி கணக்கை தொடங்கிய சிபிஎம்

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்கி உள்ளது. 


கோவில்பட்டி நகராட்சி வெற்றி நிலவரம்


6வது வார்டு - சிபிஎம் வேட்பாளர் முத்துராஜ் வெற்றி


10வது வார்டு- சிபிஎம் வேட்பாளர் முத்துலட்சுமி வெற்றி


12வது வார்டு- அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றி

உள்ளாட்சி தேர்தல்: காலை 9.30 மணி நிலவரப்படி மாநகராட்சிகளில் திமுக முன்னிலை


Karaikudi Municipal Election Results 2022 : காரைக்குடி நகராட்சியில் சுயேச்சை வெற்றி

காரைக்குடி நகராட்சியில் 1-வது வார்டில்   சுயேச்சை கார்த்திகேயன் வெற்றி

கன்னியாகுமரி கப்பியரை பேரூராட்சி 1-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆன்சி ஷோபா ராணி வெற்றி


Ambasamudram Municipal Election Results 2022 : அம்பாசமுத்திரம் தேர்தல் முடிவுகள் இதோ

அம்பாசமுத்திரம் நகராட்சி 1 வது வார்டு 


திமுக ஜோயல் - 307
அதிமுக மாரிமுத்து 548


அதிமுக மாரிமுத்து வெற்றி



அம்பாசமுத்திரம் நகராட்சி
6 வது வார்டு திமுக வெற்றி


திமுக  கல்யாணி - 398
அதிமுக 221 வனஜா

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது


Narammal Municipal Election Results 2022 : நெல்லை நாராயணம்மாள்புரம் பேரூராட்சி முடிவுகள்

நெல்லை
நாரணம்மாள்புரம் பேரூராட்சி


1-வது வார்டில் திமுக வேட்பாளர்  ராஜேஸ்வரி வெற்றி. ( 265 வாக்குகள்)


இரண்டாவது வார்டில் அதிமுக வேட்பாளர் பேச்சியம்மாள் வெற்றி. ( 165 வாக்குகள்)


3வது வார்டில் திமுக வேட்பாளர் மகாலிங்கம் வெற்றி ( 372 வாக்குகள்)


நான்காவது வார்டில் திமுக வேட்பாளர் சேர்ம செல்வம் வெற்றி (305 வாக்குகள்)


ஐந்தா வது வார்டில் அமமுக வேட்பாளர் ஈன முத்து வெற்றி (290 வாக்குகள்)



சங்கர்நகர் பேரூராட்சி


1-வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் வெற்றி (304 வாக்குகள்)


இரண்டாவது வார்டில் திமுக வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி (125 வாக்குகள்)


3வது வார்டில் திமுக வேட்பாளர் துரை சுடலைமுத்து வெற்றி (178 வாக்குகள்)


நான்காவது வாரத்தில் அமமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி (178 வாக்குகள்)

Narammal Municipal Election Results 2022 : நெல்லை நாராயணம்மாள்புரம் பேரூராட்சி முடிவுகள்

நெல்லை
நாரணம்மாள்புரம் பேரூராட்சி


1-வது வார்டில் திமுக வேட்பாளர்  ராஜேஸ்வரி வெற்றி. ( 265 வாக்குகள்)


இரண்டாவது வார்டில் அதிமுக வேட்பாளர் பேச்சியம்மாள் வெற்றி. ( 165 வாக்குகள்)


3வது வார்டில் திமுக வேட்பாளர் மகாலிங்கம் வெற்றி ( 372 வாக்குகள்)


நான்காவது வார்டில் திமுக வேட்பாளர் சேர்ம செல்வம் வெற்றி (305 வாக்குகள்)


ஐந்தா வது வார்டில் அமமுக வேட்பாளர் ஈன முத்து வெற்றி (290 வாக்குகள்)



சங்கர்நகர் பேரூராட்சி


1-வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் வெற்றி (304 வாக்குகள்)


இரண்டாவது வார்டில் திமுக வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி (125 வாக்குகள்)


3வது வார்டில் திமுக வேட்பாளர் துரை சுடலைமுத்து வெற்றி (178 வாக்குகள்)


நான்காவது வாரத்தில் அமமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி (178 வாக்குகள்)

Madurai Corporation Election Results 2022 : மதுரை 50வது வார்டில் திமுக வெற்றி

மதுரை மாநகராட்சி 50வார்டு இந்திரா காந்தி ராஜேந்திரன் திமுக வெற்றி.

Karur Corporation Election Results 2022 : கரூர் மாநகராட்சி முதல் மூன்று வார்டுகளை கைப்பற்றி திமுக

கரூர் மாநகராட்சி திமுக 1வது வார்டு திமுக வேட்பாளர் எம்.சரவணன், 2- வார்டு திமுக வேட்பாளர் வடிவேல் அரசு, 3வது வார்டு திமுக வேட்பாளர் சக்திவேல் வெற்றி.

Valparai Municipal Election Results 2022 வால்பாறை நகராட்சியை கைபற்றியது திமுக!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது


மொத்தமுள்ள 21 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுக வெற்றி. ஒரு சுயேச்சை வெற்றி

Pennagaram Municipal Election Results 2022 : பென்னாகரம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு , அரூர், கம்பைநல்லூர் தேர்தல் முடிவுகள்

பென்னாகரம்- 1 வார்டு அதிமுக 395 வாக்குகள் பெற்று வெற்றி 
பென்னாகரம் 2 வது வார்டு417 வாக்குகள் பெற்று திமுக வெற்றி


மாரண்டஅள்ளி: 1- வது வார்டு 356  வாக்குகள் பெற்று திமுக வெற்றி இரண்டாவது வார்டு 392 வாக்குகள் பெற்று திமுக வெற்றி 


பாலக்கோடு : 1வது வார்டு333 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி


அரூர் : 1வது வார்டு அதிமுக வெற்றி, 2- வது வார்டு அதிமுக வெற்றி



கம்பைநல்லூர் :1 வார்டு  477 வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி. 
இரண்டாவது வார்டு 172 வாக்குகள் பெற்று திமுக வெற்றி


காரிமங்கலம்: 1-வது வார்டு திமுக வெற்றி
2- வது வார்டு அதிமுக வெற்றி
3- அது வார்டு திமுக வெற்றி
4- அது வார்டு திமுக வெற்றி

Thiruvannamalai Municipal Election Results 2022 : திருவண்ணாமலை வேட்டவம் பேரூராட்சி அதிமுக முன்னிலை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் வெற்றி நிலவரம்


திமுக-1
அதிமுக-2

Thiruvannamalai Municipal Election Results 2022 : திருவண்ணாமலை: அதிமுக வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் 3வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி

Rameswaram Municipal Election Results 2022 ராமேஸ்வரம் நகராட்சியில் அதிமுக முன்னிலை

ராமேஸ்வரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21-வார்டு நிலவரம்


 


வார்டு 1. அதிமுக வேட்பாளர் மலையம்மாள் வெற்றி.


வார்டு 2. அதிமுக வேட்பாளர் பிரபு வெற்றி


வார்டு 3. அதிமுக வேட்பாளர்  முருகன் வெற்றி


வார்டு 4. திமுக வேட்பாளர் தில்லை புஷ்பம் வெற்றி


வார்டு 5. திமுக வேட்பாளர் தில்லைநாயகி வெற்றி

Kadalur Municipal Election Results 2022 கடலூர்: அதிமுக வேட்பாளர் வெற்றி!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில்  3 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி.

Tuticorin Corporation Election Results 2022தூத்துக்குடி மூன்று சுற்று முடிவுகள் விபரம்

தூத்துக்குடி மாநகராட்சி


1-வது வார்டு - முதல் சுற்று


திமுக - 116
அதிமுக - 22
அமமுக - 221
சுயேட்சை - 289



தூத்துக்குடி மாநகராட்சி


2-வது வார்டு - முதல் சுற்று


திமுக - 213
அதிமுக - 87
அமமுக - 281
சுயேட்சை - 279


அமமுக முன்னிலை



தூத்துக்குடி மாநகராட்சி


3-வது வார்டு - முதல் சுற்று


திமுக - 206
அதிமுக - 154
பாஜக - 41
சுயேட்சை - 157


திமுக முன்னிலை

காலை 8.55 மணி நிலவரப்படி நகராட்சிகள் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரம்


காலை 8.55 மணி நிலவரப்படி பேரூராட்சிகள் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரம்


Madurai Corporation Election Results 2022 : மதுரை 1வது வார்டில் திமுக வெற்றி!

மதுரை மாநகராட்சி 1-வது வார்டு திமுக வெற்றி.

உள்ளாட்சி தேர்தல்: 5 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை!


TN Urban Local Body Election 2022 Results: கடலூர் விருதாச்சலம் - தேர்தல் முடிவு

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 


1 மற்றும் 4 ஆவது வார்டில் திமுக வெற்றி


2 ஆவது வார்டில் தேமுதிக வெற்றி 


3 ஆவது வார்டில் சுயேச்சை வெற்றி 

TN Urban Election 2022 Results LIVE: 5 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை

உள்ளாட்சி தேர்தல்: 5 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை


 


 



Coimbatore Election Results live: கோவை கருமத்தம்பட்டி - திமுக வெற்றி

கோவை கருமத்தம்பட்டி நகராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வாணி ஸ்ரீ 504 வாக்குகள் பெற்று வெற்றி


கருமத்தம்பட்டி நகராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் 467 வாக்குகள் பெற்று வெற்றி


கருமத்தம்பட்டி நகராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் பழனியம்மாள் 378 வாக்குகள் பெற்று வெற்றி

TN Urban Election 2022 Results LIVE: நெல்லை ஏர்வாடி - எஸ்டிபிஐ வெற்றி

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி 1-வது வார்டில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் ஜனத்  வெற்றி 


3வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செய்யது அலி பாத்திமா வெற்றி

Tirunelveli Corporation Election 2022 LIVE: திருநெல்வேலி - திமுக வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி 2 வது வார்டு திமுக வேட்பாளர்  மாரியம்மாள் 125 வாக்குகள் பெற்று வெற்றி


திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பேரூராட்சி 1வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் 304 வாக்குகள் பெற்று வெற்றி

TN Urban Election 2022 Results LIVE: திருவண்ணாமலை வேட்டவலம் - திமுக வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் முதல் வார்டு  திமுக வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றார்

மூலக்கரைப்பட்டி, மணிமுத்தாறு, களக்காடு தேர்தல் முடிவுகள்

மூலக்கரைப்பட்டி வார்டு 1 திமுக வெற்றி 
வார்டு-2 காங்கிரஸ் வெற்றி



மணிமுத்தாறு பேரூராட்சி வார்டு வார்டு-1 திமுக வார்டு 2 சுயச்சை வெற்றி



மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் 1வது வார்டு திமுக வேட்பாளர் பார்வதி 
இரண்டாவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் மரியா சாந்தி வெற்றி.



களக்காடு நகராட்சி வார்டு 3 அதிமுக வெற்றி


களக்காடு நகராட்சியில் 2 வது வார்டில் சுயேச்சை வெற்றி

பரமக்குடி திமுக வெற்றி

பரமக்குடி நகராட்சி 4வது வார்டில் திமுக வெற்றி.

மணிமுத்தாறு பேரூராட்சி தேர்தல் முடிவுகள்

மணிமுத்தாறு பேரூராட்சி வார்டு வார்டு-1 திமுக, வார்டு 2 சுயச்சை வெற்றி

சுயே., வேட்பாளர் வெற்றி

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சி 1 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர்  கவிதா வெற்றி

தபால் வாக்கு: அதிமுக முன்னிலை

அம்பாசமுத்திரம் நகராட்சி 1 வது வார்டில் மொத்தம் 6 தபால் வாக்குகளில் 4 அதிமுக 2 திமுக 


 

12 வாக்குகள் வித்தியாத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

சேலம் தேவூர் பேரூராட்சி 1வது வார்டில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

திசையன்விளை 1வது வார்டில் காங்கிரஸ் வெற்றி

நெல்லை திசையன்விளை  1வது வார்டில் காங்கிரஸ் வெற்றி

பொன்னமராவதி 1வது வார்டில் திமுக வெற்றி

பொன்னமராவதி பேரூராட்சி 1வது வார்டில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு

நெல்லை: பேரூராட்சி முடிவு அறிவிப்பு

நெல்லை மூலக்கரைப்பட்டி பேரூராட்சி 1வது வார்டில் திமுக, 2வது வார்டில் காங்கிரஸ் வெற்றி

வாக்கு பதிவு இயந்திரங்கள் பூட்டப்பட்ட அறையின் சாவி தொலைந்தது

கடலூர் புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு மையத்தின் சாவி தொலைந்ததால், வாக்கு எண்ணும் பணியில் தாமதம். 



மாநகராட்சி வார்டுகளில் 4 இடங்களில் திமுக வெற்றி

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்கள், மாநகராட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

218 பேர் போட்டியின்றி தேர்வு

இந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் இதுவரை 218 பேர் போட்டியின்றி தே்ரவு செய்யப்பட்டுள்ளனர். 

மும்முரமாக தபால் ஓட்டு எண்ணும் பணி

தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளின் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. 

TN Urban Election 2022 Results LIVE: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது துவங்கியுள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. 



TN Urban Election 2022 Results LIVE: மதுரையில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்கும் பணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அடையாள அட்டை வழங்கிய நிலையில், போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால், செய்தியாளர்கள் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



TN Urban Election 2022 Results LIVE: அம்பாசமுத்திரம் நகராட்சி தபால் ஓட்டுகள் வருகை

அம்பாசமுத்திரம் நகராட்சிக்கான தபால் ஓட்டுகள் வருகை. பலத்த பாதுகாப்புடன் வேட்பாளர்கள் முன்னிலையில் எண்ண தயாராக உள்ளது. 



TN Urban Election 2022 Results LIVE: கோவையில் முண்டியடிக்கும் முகவர்கள்

கோவையில் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு குவிந்த முகவர்கள், முண்டியடித்து உள்ளே நுழைந்து வருகிறார்கள். 



TN Urban Election 2022 Results LIVE: தீவிர கண்காணிப்பிற்கு பின் அனுமதி

விழுப்புரத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அலுவலர்கள், பூத் ஏஜெண்டுகள், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 



திருவண்ணாமலையில் குவிந்துள்ள கட்சியினர்

திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையம் முன்பு திரண்டுள்ள கட்சி தொண்டர்கள். முடிவுகளை அறிய ஆவலுடன் பங்கேற்பு

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் !

ராயபுரம்(49-63 வார்டுகள்) வாக்குகள் எண்ணப்படுகின்றன. பிராட்வேயிலுள்ள  பாரதி மகளிர் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.


திரு.வி.க.நகர்(64-78 வார்டுகள்) வாக்குகள் எண்ணப்படுகின்றன. நம்மாழ்வார்பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னின் கல்லூரியில் வாக்கு எண்ணப்படுகின்றன.

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் !

மாதவரம்(23-33 வார்டுகள்) வாக்குகள் எண்ணப்படுகின்றன. சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 


தண்டையார்பேட்டை(34-48 வார்டுகள்) வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் !

திருவொற்றியூர் (1-14 வார்டுகள்) வாக்குகள் எண்ணப்படுகின்றன. வெள்ளையன் செட்டியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 


மணலி(15-22வார்டுகள்) வாக்குகள் எண்ணப்படுகின்றன. மணலியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மும்முனை போட்டி !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டது. அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே தேர்தலை சந்தித்தனர். 

கோவை மாநாகராட்சியில் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையம் வருகை !

கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தபால் வாக்குகள் கொண்டு வரப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம் வாக்கு எண்ணிக்கை விவரம் !

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு உள்ளாட்சி அமைப்புகளில்   காலியாக உள்ள மொத்தம் 155 பணியிடங்களுக்கு  808 பேர் போட்டியிட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சியை  பொறுத்தவரை 50 வார்டுகளுக்கு  308 பேர் போட்டியிட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மாங்காடு ஆகிய இரு நகராட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மாதா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறவுள்ளது.வாலாஜாபாத் உத்தரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் ஆஜிய  மூன்று பேரூராட்சிகளுக்கும், காஞ்சிபுரம்  மாநகராட்சிக்கும்  வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள  அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு  கல்லூரியில் நடைபெற உள்ளது.

பிரச்னை ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிய பின்பு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11,797 சிசிடிவி கேமராக்கள் !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்க 11,797 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் 15 வாக்கு எண்ணும் மையங்கள் !

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 15 மையங்களில் நடைபெறுகிறது.

அதிகபட்சமாக 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை- மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அதிகபட்சமாக 3 சுற்றுகள் வரை எண்ணப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 2ஆவது சுற்றின் முடிவிலேயே முடிவுகள் தெரிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும். 

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வசதி

வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கும் வேட்பாளர்கள், முகவர்கள் , செய்தியாளர்களுக்கு உள்ளேயே உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படும்

யார் யாருக்கு அனுமதி?

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்ட செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

வாக்கு பதிவு இயந்திரம் திறக்கப்படுவது எப்படி?

அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் அகற்றப்பட்டு திறக்கப்படும். 

வார்டு வாரியாக ஓட்டு எண்ணிக்கை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திற்கு வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு வார்டு முடிவுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்படும். 

மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே, மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைக்கு பிறகே வேட்பாளர் உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்படுவர். 

தீவிர கண்காணிப்பு பணி

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்புக்கு பிறகே முகவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

கட்சி முகவர்கள் வருகை

வாக்கு எண்ணிக்கைக்காக அதிகாலையிலேயே கட்சி முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் குவிந்துள்ளனர். 

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்

வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணும் முன் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. 

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. 

Background

Tamil Nadu Urban Local Body Election Results 2022 LIVE: 


சென்னை மாநகராட்சி முதல் நெல்லை மாநகராட்சி வரை உள்ள அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளின் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்களுக்காக இந்த லைப் பிளாக்கில் அப்டேப் செய்கிறோம். உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை ஒரே தளத்தில் காண முடியும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.