தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து நேற்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 3 வேட்பாளர்கள் பேட்டியின்றி தேர்வாகிய நிலையில் 835 வேட்பாளர்கள் மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளனர்.
முட்டாள், மடையருக்கு அர்த்தம் தெரியுமா..? இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தமாட்டீங்க..!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் நடைபெறும் சனிக்கிழமை வரை 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பு சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து, கூட்டுறவுத் துறை சார் பதிவாளரும், பறக்கும் படை அலுவலருமான நடராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கூறைநாடு பகுதிகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகளின் முன்பு சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
Watch Video: அடி ஆத்தி... 80 கிலோ எடையை தூக்கிய திஷா பதானி! வைரலாகும் வீடியோ
இதனையடுத்து நிகழ்விடத்துக்கு அதிகாரிகள் சென்றதை அடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மது பாட்டில்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மொத்தம் 85 மது பாட்டில்களை கைப்பற்றிய பறக்கும் படை அலுவலர் நடராஜன் அவற்றை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான பாலுவிடம் ஒப்படைத்தார். மேலும் இதுபோன்று பல்வேறு இடங்களில் மதுபான விற்பனை கள்ளச்சந்தையில் நடைபெற்று வருவதாகவும் இதனை காவல்துறையினர் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.