நடிகை திஷா பதானி 80 கிலோ எடையை தூக்கும் விடியோ வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் வெளியான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் திஷா பதானி. ஆக்ஷன் பிறகு பல படங்களில் நடித்து பாலிவுட்டின் பிகினி குயின் என்றே அழைக்கப்பட்டு வருகிறார் நடிகை திஷா பதானி. லோஃபர் எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 48.6 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டுள்ள திஷா பதானி ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க அடுக்கி ரசிகர்களை அலற வைத்துள்ளார்.






நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகனும் ஹீரோவுமான டைகர் ஷெராஃப்பை திஷா பதானி காதலித்து வருவதாக பாலிவுட்டில் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்படங்களும், இருவரது திருமணம் குறித்து ஜாக்கி ஷெராஃப் பேசியதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தின. செம ஸ்லிம்மாக பென்சில் போல இருக்கும் திஷா பதானி வெறித்தனமான வொர்க்கவுட் ஃப்ரீக். ஹெவி வெயிட்டுகளை லிஃப்டிங் செய்வது, கிக் பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் என எப்போதுமே ஜிம் கேர்ளாகவே இருப்பதையும் பிகினி புகைப்படங்களுக்கு இடையே இடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் திஷா பதானி.






இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஜிம் விடியோவில் 80 கிலோ வெயிட்டை தூக்குகிறார். அந்த வீடியோவில் கருப்பு ஜிம் உடை அணிந்து 80 கிலோ வெயிட்டிங் முன்பு நின்று, பயிற்சியாளர் சொல்ல சொல்ல 5 முறை தூக்குகிறார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட 20அணி நேரத்தில் 25 லட்சம் பார்வைகளை கடந்தது. மேலும் 6 லட்சம் லைக்குகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 3000 பேர் கமென்ட் செய்துள்ளனர். அதில் அவரது கணவர் டைகர் ஷெரிஃப், 'ஒண்டர் வுமன்' என்று கமென்ட் செய்துள்ளார்.