தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து, அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி தேர்தல் தொடர்பான பணிகளிலும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Urban Local Body Election | கம்பம் சேர்மேன் சீட்டுக்கு மல்லுக்கட்டும் திமுக நகர செயலாளர்கள்
பிரதான கட்சிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி நீடித்து வந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சி 17 ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி சொர்ணாம்பாள் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் நோக்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். மேலும் வயது முதிர்ந்த மூதாட்டி என்று பாகுபாடு பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் சீட் கொடுத்துள்ளது சம்பவம் மயிலாடுதுறை மக்களிடையே ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக மனுத்தாக்கல் செய்ய வரும்போது கரும்பு விவசாயி சின்னத்தை குறிக்கும் வகையில் கரும்புகளை கைகளில் எடுத்து வந்து மனு தாக்கல் செய்தார்.
நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு : குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
இளம் வயதினர் கல்லூரி பயிலும் மாணவர்கள் என இளையதலைமுறை பல இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றார் எண்ணத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 75 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிகழ்வு, முதியவர்கள் மட்டுமின்றி, அரசியலில் குறித்து புரிதலின்றி ஒதுங்கி இருக்கும் பல இளைஞர்களுக்கும் இவர் ஒரு முன்னுதாரணம் என பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.