அரசியல் கட்சி வேட்பாளர்களை விடல சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குறுதிகள் தான், எல்லையை கடந்து போகிறது. அதை நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதை கடந்து, வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர் வேட்பாளர்கள். அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சுயேட்சை வேட்பாளர் ஒருவர், வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். 


காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் 44 வார்டில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சண்முகம் தான், அந்த பெருமைக்குரிய வேட்பாளர். 





இவர் தனது தேர்தல் வாக்குறுதிகளாக, ‛வீட்டு உரிமையாளர்களின் ஒப்புதலோடு வீட்டுக்கு ஒரு மரம் நடப்படும் என்றும், குப்பை மறு சுழற்சி, பிள்ளைகள் வெளிநாடு வெளியூர் சென்று தருணத்தில் வீட்டில்  தனியாக இருக்கும்
மூத்த குடிமக்களுக்கு  காலை இரவு நேரங்களில் உணவு வீடு தேடி அளிப்பது. பாதாள சாக்கடை , கழிவு நீர் பிரச்சனை ஏற்படாமல் தன்னுடைய வார்டுக்கு தனியாக கழிவுநீர் ஊர்தி ஏற்பாடு செய்தல், உள்ளிட்ட பல்வேறு வளார்ச்சிப் பணிகள் செய்துத் தரப்படும்,’ என வாக்குறுதிகள் அளித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இளம் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.




மக்கள் பிரச்சினைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் தான் வெற்றி பெற்றால், அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண வழிபிறக்கும் என்பது அவரின் தீவிர பிரசாரமாக இருந்து வருகிறது. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பே காவல்துறை உதவியுடன் வேதாசலம் நகர் பகுதி முழுவதிலும் சிசிடிவி கேமராவை தான் பொருத்தியிருப்பதாகவும், மேலும் தனது தொடர் முயற்சியால் நோய் தொற்று அதிகம் பரவியிருந்த சூழலில் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி அந்த நகரில் இருக்கக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்பதையும் அவர் நினைவூட்டுகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் இளம் வேட்பாளர் சண்முகத்தின் வித்தியாச அணுகுமுறை வரவேற்பை பெற்றுள்ளது என்று அவரே கூறுகிறார். 


இதே போல, மேலும் பல மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண