பண மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதையடுத்து, ரமேஷ் குடவாலா மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி மனுத்தாக்கல் செய்தார். 


இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி தொடர்ந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


வழக்கு பின்னணி : 


கடந்த 2015 ம் ஆண்டு காமெடி நடிகர் சூரி சென்னையில் இடம் வாங்க திட்டமிட்டு, இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் தகவல் தெரிவித்துள்ளார். உடனே விஷ்ணு விஷால், தன்னுடைய தந்தையான ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் குடவாலாவிடம் சூரி இடம் வாங்குவது குறித்தும், அவருக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். 


இதையடுத்து,ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனும் இணைந்து நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காண்பித்துள்ளனர். அதன்பின்னர் அந்த இடத்தை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்து நடிகர் சூரிக்கு  சிறுசேரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. நடிகர் சூரிக்கு விற்கப்பட்ட அந்த இடத்துக்குப் பாதை இல்லை என்ற விவரம் பின்னே தெரியவர, இதுகுறித்து விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் என மூவரிடமும் முறையிட்டுள்ளார். 


தொடர்ந்து, அந்த இடத்திற்கு சரியான பாதை எதுவென்று தெரியாமல் நடிகர் சூரி குழப்பத்தில் தவித்துள்ளார். மீண்டும் இதுகுறித்து அவர்களிடம் விவாதிக்க, அந்த இடத்தை தாங்களே வாங்கிகொள்வதாக தெரிவித்து 10 லட்சம் முன் பணமாக வழங்கியுள்ளனர். ஆனால், அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த ஒரு பணமும் வரவில்லை. 


நடிகர் சூரி தரப்பு பணம் கேட்டு நடிகர் விஷ்ணு விஷாலிடம் கோரிக்கை வைக்க, பின்னர் 50 லட்சம் வழங்கபட்டுள்ளது. அதன்பிறகு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதனால் நடிகர் சூரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்தார். ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மீதே குற்றம் சாட்டப்பட்டதால் புகார் அளிக்கப்பட்டதால் அந்த வழக்கு இன்று வரை கிடப்பில் இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண