இரட்டை இலை சின்னத்தை இதயத்தில் இருந்து தூக்கி எறிந்து விடலாம் என நினைத்தாலும், ஓபிஎஸ்-ன் மனசாட்சி நேற்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துள்ளது என ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.
ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே. மூக்கையாத்தேவர்-ன் நினைவிடத்தில் அவரின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அருகில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு சிலை வைக்க அரசாணை வழங்கி சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தது. பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு மண்டபம் அமைத்து கொடுத்தது என அதிமுக ஆட்சி காலத்தில் செய்துள்ளோம். நேற்று பெருங்காமநல்லூரில் தியாகிகளின் நினைவிடத்திலும், இன்று பி.கே.மூக்கையாத்தேவருக்கும் மரியாதை செலுத்தியுள்ளோம்.
நல்ல செய்தி கிடைக்கும்
கச்சத்தீவை தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்த போது அதற்கு எதிராக குரல் கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பி.கே.மூக்கையாத்தேவர் என்பது வரலாற்று பதிவு. அதிமுகவை பொருத்த மட்டில் அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீட்க வேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் மூலம் முன்மாதிரியாக எடுத்துரைத்து வழக்கு கொடுத்தார். கட்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை முடிவு. இந்தியாவின் ஒரு பகுதி அதை தாரை வார்த்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், மீட்டெடுக்க வேண்டும் என்பதில் அம்மாவின் வழியில் எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார், நிச்சயமாக நல்ல செய்தி கிடைக்கும்” என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தது குறித்த கேள்விக்கு -
இரட்டை இலை என்பது அவர்களுக்கு வாழ்வு, அடையாளம் கொடுத்தது, முகவரி கொடுத்தது. இன்று ஒரு தொகுதியில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் இதயத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை தூக்கி எறிந்து விடலாம் என நினைத்தாலும், அவரது மனசாட்சி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துள்ளது, அதுவே அதற்கு சாட்சியாக உள்ளது என்பது தான் நேற்றைய சாட்சி. இரட்டை இலையில் நேற்று வாக்கு சேகரித்துள்ளார். ஒரு நிலைப்பாட்டை உடனடியாக மாற்ற முடியாது அது மனித இயல்புக்கு எதிரானது. இந்த பதவிக்காக என்ன நிலைப்பாடை எடுத்தாலும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள போவதில்லை, மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனப் பதிலளித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rahul Gandhi: ’இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டம்’- வயநாட்டில் மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி
மேலும் செய்திகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும் - Leopards Movement: அங்குமிங்கும் நடமாடும் சிறுத்தை.. அதிரடியாக மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!