தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலமாக தெலங்கானா மாநிலம் உள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானது முதலே அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தது பாரத் ராஷ்ட்ரிய சமிதி. தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரசேகர் ராவ்.


17 தொகுதியிலும் தோல்வி:


கடந்த சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்தார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தனது கட்சியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றியது முதலே சந்திரசேகர் ராவிற்கு பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது.


நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த முறை மீண்டு வரலாம் என்று கருதிய சந்திரசேகர் ராவிற்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


அதாவது, தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட சந்திரசேகர் ராவின் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி முன்னணியில் இல்லை. அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பா.ஜ.க. 7 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஒரு தொகுதியில் ஓவைசி முன்னணியில் உள்ளார்.


பரிதாப நிலையில் சந்திரசேகர் ராவ்:


தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லாமல் இருப்பதால், இந்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் படுதோல்வி அடைந்திருப்பது பி.ஆர்.எஸ். கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் மகபுதாபாத், தம்மம் ஆகிய 2 தொகுதியில் மட்டுமே இரண்டாவது இடத்தில் பி.ஆர்.எஸ். கட்சி உள்ளது. மற்ற இடத்தில் எல்லாம் 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.


மேலும் படிக்க: Election Results 2024 LIVE: சந்திரபாபு நாயுடுவுடன் பேசிய சரத்பவார்?: பாஜக கூட்டணியை தூக்குகிறதா இந்திய கூட்டணி!


மேலும் படிக்க: Coimbatore Election Results 2024: பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பின்னடைவு! தி.மு.க. தொடந்து முன்னிலை!