கோவை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வின் கணபதி ராஜ்குமார் வெற்றியை உறுதி செய்துள்ளார்.


திமுக-185366
பாஜக-295739
அதிமுக-152826 


இதையடுத்து, கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார்.


11.15 நிலவரம்- திமுக வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமார் 64,190 வாக்குகளுடன் முன்னிலை!


கே. அண்ணாமலை 43,415 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அ.தி.மு.க.வின் சிங்கை ராமசந்திரன் 27,471 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


இரண்டாவது சுற்று 


கோவை மக்களவை தொகுதியில்  திமுக வேட்பாளர் ராஜ்குமார்  19813 வாக்குகள் முன்னிலை


திமுக 53580


பாஜக 41167


அதிமுக 2339





கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.


நாடே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாள் இன்று. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணி காலை 8 மணி மணிக்கு தொடங்கியுள்ளது. கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு சாதகமாக இருக்கும் என்று கணிப்புகள் இருந்த நிலையில், கோவை தொகுதியில் தி.மு.க. கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்தது.இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கோயம்புத்தூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு அந்த தொகுதியின் விவரங்களை காணலாம். 


கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி:


இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:



  • கோவை தெற்கு

  • கோவை வடக்கு

  • சிங்காநல்லூர்

  • கவுண்டம்பாளையம்

  • சூலூர்

  • பல்லடம்


கோயம்புத்தூர் தொகுதி வாக்காளர்கள் விவரம்


மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை -  20,83,034


ஆண் வாக்காளர்கள் - 10,30,063


பெண் வாக்காளர்கள் - 10,52,602


இதர வாக்காளர்கள் - 369


வேட்பாளர்கள் விவரம்


தி.மு.க. கூட்டணி - கணபதி ராஜ்குமார்


அ.தி.மு.க. - சிங்கை ராமசந்திரன்


பா.ஜ.க. - கே. அண்ணாமலை


நா.த.க.  - ம.கலாமணி ஜெகநாதன்


பதிவான வாக்குகளின் விவரம்


இந்த தொகுதியில் 64.42 சதவீதம் 13 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் பதிவாகியது. 


இந்த தொகுதியில் 1971, 1977, 2004,2009  ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் சி.பி.ஐ. வெற்றி பெற்றது. 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்ற்ய்ள்ளது. 2014-ல் அதிமுக வெற்றி பெற்றது. 2029-ல் சி.பி.என். வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் பிறந்த நாள் பரிசாக அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா என அவரது தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.


கோவை தொகுதியில் வாக்கு எண்ணிகை 24 சுற்றுகள் முடிந்து அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய தொகுதிகளில் 24 சுற்றுகளும் சிங்காநல்லூர்,கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் 22 சுற்றுகளும் கோவை தெற்கில் 18 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.