Election Results 2024 LIVE: மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே

Lok Sabha Election Results 2024 LIVE Updates: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எண்ணிக்கயின் சமீபத்திய மற்றும் உடனுக்குடனான தகவல்களை இந்த நேரலையின் பக்கத்தில் காணலாம்.

செல்வகுமார் Last Updated: 04 Jun 2024 05:55 PM
Election Results 2024 LIVE: மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே

Election Results 2024 LIVE: மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு. மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் மனதார ஏற்கிறோம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்த பிரச்னைகளை நாங்கள் மனதார மக்களிடம் கொண்டு சென்றோம் - மல்லிகார்ஜுன கார்கே

Election Results 2024 LIVE: ராகுல், ப்ரியங்கா காந்தி காங்கிரஸ் அலுவலகம் வருகை

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி வருகை தந்துள்ளனர்

Election Results 2024 LIVE: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி
”தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்” தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
மிகப்பெரிய திருப்பம்! உத்தர பிரதேசத்தில் 43 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

உத்தர பிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி 43 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

எம்.பி ராகுல் காந்தி வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகம்

கேரள மாநிலம் வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார். 

திருவனந்தபுரத்தில் 3.51 லட்சம் வாக்குகள் பெற்று சசி தரூர் வெற்றி முகம்

கேரள திருவனந்தபுரத்தில் 3.51 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் வெற்றி வெற்றி முகத்தில் உள்ளார். 

Election Results 2024 LIVE: சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசிய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்..!

கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என தகவல்!

Election Results 2024 LIVE: ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்றார் ராகுல் காந்தி..!

ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ராகுல் காந்தி.

Election Results 2024 LIVE: இந்திய கூட்டணியில் துணைப் பிரதமராகும் நிதிஷ்குமார்..?

நிதிஷ்குமாரை துணைப் பிரதமராக்க இந்திய கூட்டணி முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக 295 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது தவிர, இந்திய கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில்,  காங்கிரஸ் தலைவர் கார்கே, I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்களை ஆலோசனைக்கு அழைத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Election Results 2024 LIVE: பாஜக கூட்டணி 298 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் 227 தொகுதிகளில்...

மதியம் 2.40 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 227 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 



”இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம்”சந்திரபாபு நாயுடுவுக்கு டி.கே.சிவக்குமார் உறுதி

”இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என ”சந்திரபாபு நாயுடுவுக்கு டி.கே.சிவக்குமார் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சந்திரபாபு நாயுடுவுடன் பேசிய சரத்பவார்: பாஜக கூட்டணியை தூக்குகிறதா இந்திய கூட்டணி!

பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோருடன் இந்திய கூட்டணியில் உள்ள சரத்பவார் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியை தூக்குகிறதா இந்திய கூட்டணி என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளது. மேலும் நவீன் பட்நாய்க்குடன் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Election Results 2024 LIVE: 15 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்த காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 100  இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணியானது 228 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

Election Results 2024 LIVE: ஜம்மு காஷ்மீரில் பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்: நடிகை ரோஜாவுக்கு பின்னடைவு

சட்டப்பேரவைத் தேர்தல்: ஆந்திர மாநிலம் நரி தொகுதியில்  போட்டியிட்ட நடிகை ரோஜா, TDP வேட்பாளரை விட 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

Election Results 2024 LIVE: ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் சந்திரபாபு நாயுடு: மோடி, அமித்சா வாழ்த்து!

ஆந்திர பிரதேசத்தில் மக்களவையுடன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் TDP கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆட்சியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


சந்திரபாபு நாயுடுவுக்கு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்சா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 





Election Results 2024 LIVE: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொடர் முன்னிலை

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 20 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

Election Results 2024 LIVE: 300 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், 1.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணியானது 300 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல்: யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை!

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில்,  பாஜக 73 தொகுதிகளிலும்  BJD 58 தொகுதிகளிலும் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.



கருத்து கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா பானர்ஜி

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்



Election Results 2024 LIVE: கேரளா கால்பதித்த பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றி

Election Results 2024 LIVE: கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். 

Election Results 2024 LIVE: கேரளாவில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் முன்னிலை; பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை....

கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

Election Results 2024 LIVE: பீகாில் பாஜக கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை

பீகாில் உள்ள 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 05 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

Election Results 2024 LIVE: சுப்ரியா சுலே 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

Election Results 2024 LIVE: மகாராஷ்டிராவில் உள்ள பாராமதி தொகுதியில், சுப்ரியா சுலே 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Election Results 2024 LIVE: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 30 தொகுதிகளில் முன்னிலை

மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 30 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

Election Results 2024 LIVE: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை

மகாராஷ்டிராவில் உள்ள மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 19 தொகுதிகளிலும்  முன்னிலை வகிக்கிறது. 

Election Results 2024 LIVE: டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலை

டெல்லியில் உள்ள 7 அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது

2வது இடத்தில் நோட்டா: மத்தியப்பிரதேசம் இந்தூரில் அதிர்ச்சி

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில், 1,38,263 வாக்குகளை நோட்டா பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடைசி நேரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் , பாஜக கூட்டணிக்கு மாறியதால், நோட்டாவுக்கு வாக்கு சேகரித்தது இந்தியா கூட்டணி 

Election Results 2024 LIVE: பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை

Election Results 2024 LIVE: பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.



Election Results 2024 LIVE: காங்கிரஸ் தனித்து 99 தொகுதிகளில் முன்னிலை

இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  

Election Results 2024 LIVE: அயோத்தி ராமர் கோயில் தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலை

அயோத்தி ராமர் கோயில் உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது



154 தொகுதிகளை பெற்று ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றுகிறார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 154 தொகுதிகளை பெற்று ஆட்சியை கைப்பற்றுகிறார் சந்திரபாபு நாயுடு. 

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 63 தொகுதிகளில் முன்னிலை

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 63 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிஜூ ஜனதா தளம் 46 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

வாரணாசியில் பிரதமர் மோடி 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

வாரணாசியில் பிரதமர் மோடி 2,20,316 வாக்குகள் பெற்று 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Election Results 2024 LIVE:  வயநாட்டில் ராகுல் காந்தி 1.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

Election Results 2024 LIVE: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 1,57,096 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

Election Results 2024 LIVE: காந்தி நகரில் அமித்ஷா முன்னிலை

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா 3, 17, 083 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

Election Results 2024 LIVE: பிரதமர் மோடி 1.34 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை 

உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில்  போட்டியிடும் பிரதமர் மோடி 1,34,128 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Election Results 2024 LIVE: நடிகை கங்கனா ரனாவத் 2.87 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை

இமாச்சல் பிரதேசம் மந்தி தொகுதியில்  போட்டியிடும் பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரனாவத் 2,89,471 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Election Results 2024 LIVE: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை

Election Results 2024 LIVE: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ்  7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

Election Results 2024 LIVE: அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணிக்கு பின்னடைவு

Election Results 2024 LIVE: உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணிக்கு பின்னடைவு,

Election Results 2024 LIVE: மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை

மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 

Election Results 2024 LIVE:  300 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி 

Election Results 2024 LIVE: பாஜக கூட்டணி 300 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது

Election Results 2024 LIVE: வயநாடு தொகுதியை தொடர்ந்து, ரேபரேலி தொகுதியிலும் ராகுல் முன்னிலை

வயநாடு தொகுதியில் 1.12 லட்சம் வாக்குகள் முன்னிலை வகித்து வரும் நிலையில், ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி 57, 729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

Election Results 2024 LIVE: வயநாட்டில் ராகுல் காந்தி 1.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

Election Results 2024 LIVE: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 1.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷன் மகன் முன்னிலை

India General Election Results 2024: பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்.பி., ஆன பிரிஜ் பூஷனின் மகன், கரன் பூஷன் சிங் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

பாஜக Vs I.N.D.I.A. கூட்டணி இடையே கடும் இழுபறி

Election Results 2024 LIVE: 10.45 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 265 இடங்களிலும், I.N.D.I.A. கூட்டணி 254 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

Election Results 2024 LIVE: கர்நாடகாவில் திடீர் திருப்பம் - பாஜகவுக்கு போட்டி தரும் காங்கிரஸ் கட்சி

கர்நாடகாவில் கடும் போட்டி தரும் காங்கிரஸ் - 17 இடங்களில் பாஜகவும், 11 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிப்பதால் கடும் இழுபறி நீடிக்கிறது. 

Election Results 2024 LIVE: மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் - மதுரா தொகுதி பாஜக வேட்பாளர் ஹேமமாலினி நம்பிக்கை

பாஜக எம்பியும், உ.பி.யின் மதுராவின் பாஜக வேட்பாளருமான ஹேமமாலினி மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "இது தற்போது மிகவும் உற்சாகமான தருணம், எங்கள் கட்சி வரும், நாங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்போம் என்று நான் நம்புகிறேன். நானும் நல்ல முன்னிலை பெற்றுள்ளேன்” என கூறியுள்ளார். மதுரா தொகுதியில் ஹேமமாலினி 48,110 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக?

Election Results 2024 LIVE: ஒடிசா சட்டமன்ற தேர்தலில் 10 மணி நிலவரப்படி, பாஜக 25 தொகுதிகளிலும், ஆளும் பிஜு ஜனதா தளம் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

சசிதரூர் மீண்டும் முன்னிலை

India General Election Results 2024: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் 1,920 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

அமேதியில் 10,000 வாக்குகள் பின்தங்கிய ஸ்மிருதி இரானி

Lok Sabha Election Result 2024 LIVE: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் பின்னடைவைச் சந்த்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எல். ஷர்மா 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

முன்னாள் பிரதமராவார் மோடி - ஜெய்ராம் ரமேஷ்

Lok Sabha Election Result 2024 LIVE: தற்போதைய தேர்தல் நிலவரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “தற்போதைய பிரதமர் முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் என்பதை இந்த போக்குகள் காட்டுகின்றன. இது அவரது தார்மீக மற்றும் அரசியல் தோல்வி. பிரதமர் பின்னடைவை சந்தித்தது இதற்கு முன் நடந்ததில்லை. அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் மோடி பின்னடைவைச் சந்தித்தது வெறும் டிரெய்லர் தான்” என தெரிவித்துள்ளார்.





ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றுகிறாரா சந்திரபாபு?

Election Results 2024 LIVE: ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைமயிலான கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தவறாகும் கருத்து கணிப்பு முடிவுகள்

Lok Sabha Election Result 2024 LIVE: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும், I.N.D.I.A. கூட்டணி அதிகபட்சம் 160 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என தெரிவித்தன. ஆனால், தற்போதைய சூழலில் I.N.D.I.A. கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பிரதமர் மோடி முன்னிலை

Election Results 2024 LIVE: வாரணாசி தொகுதியில் முதல் மூன்று சுற்றுகளில் பின்னடைவைச் சந்தித்த பிரதமர் மோடி, நான்காவது சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். 

கிழக்கு மாநிலங்களில் பாஜக ஆதிக்கம்

Lok Sabha Election Result 2024 LIVE: ஆரம்பகட்ட தகவல்களின்படி,  பிகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய கிழக்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

பிரதமர் மோடி தொடர்ந்து பின்னடைவு

Election Results 2024 LIVE: 3வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் பிரதமர் மோடி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இந்தி பேசும் மாநிலங்களிலும் I.N.D.I.A. கூட்டணி ஆதிக்கம்

Election Results 2024 LIVE: 9.40 மணி நிலவரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில்  I.N.D.I.. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதேபோல, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

அமேதியில் ஸ்மிருதி இரானி பின்னடைவு

Lok Sabha Election Result 2024 LIVE: உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கே.எல். ஷர்மா 3000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மிரட்டும் I.N.D.I.A. கூட்டணி

Election Results 2024 LIVE: உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், 9.30 மணி நிலவரப்படி அங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.

பங்குச்சந்தை கடும் சரிவு

Lok Sabha Election Result 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக மற்றும் I.N.D.I.A. கூட்டணி இடையே கடும் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில், பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. நேற்றைய நாளை விட, 9.30 மணியளவில் சென்செக்ஸ் 3 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.

244 தொகுதிகள் - பாஜக Vs I.N.D.I.A.

Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகள் அடங்கிய  I.N.D.I.A. கூட்டணியும் தலா 244 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

வாரணாசியில் பிரதமர் மோடி பின்னடவு

Lok Sabha Election Result 2024 LIVE: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்ட, பிரதமர் மோடி 5000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தொங்கு நாடாளுமன்றம் அமைகிறது

Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி 244 இடங்களில் முன்னிலை வகிக்க, INDIA கூட்டணி 243 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. எந்த ஒரு கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை அமையாவிட்டாவில், தொங்கு மக்களவை அமைய அதிக வாய்ப்புள்ளது.

200 இடங்களில் எதிர்க்கட்சிகள் முன்னிலை

Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில், 9.15 நிலவரப்படி பாஜக கூட்டணி 257 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பின்னடைவு

India General Election Results 2024: காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபல் போட்டியிட்ட கேரள மாநிலம் ஆலப்புழா தொகுதியில், பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

Lok Sabha Election Result 2024 LIVE: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், இடதுசாரிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் பாஜக முன்னிலை

Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் பெரும்பான்மயை பெற, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழலில் பாஜக கூட்டணி 281 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆதிக்கம்

Election Results 2024 LIVE: 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில், பாஜக கூட்டணி 41 இடங்களிலும், I.N.D.I.A. கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் கடும் போட்டி

Lok Sabha Election Result 2024 LIVE: மகாராஷ்டிராவில் பாஜக தலைமயிலான கூட்டணி 26 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

டெல்லியில் பாஜக - ஆம் ஆத்மி இடையே இழுபறி

Lok Sabha Election Result 2024 LIVE: டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் நான்கில் ஆம் ஆத்மி கட்சியும், மூன்றில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன.

பல மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

Election Results 2024 LIVE: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல மாநிலங்களில் முன்னணியில் உள்ளது. உ.பி., பீகார், மகாராஷ்டிரா, வங்காளம், கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். 

150, 250 தொகுதிகளில் முன்னிலை

Lok Sabha Election Result 2024 LIVE: மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி 251 இடங்களிலும், I.N.D.I.A. கூட்டணி 154 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

ஐதராபாத்தில் ஓவைசி முன்னிலை

India General Election Results 2024: ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஐதராபாத்தில் 6,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ஐதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் 6787 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது.  பாஜக 235 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளது.

மேற்குவங்கத்தில் யார் முன்னிலை?

Lok Sabha Election Result 2024 LIVE:  திரிணாமுல் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக,  மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 


பாஜக-17
காங்கிரஸ்-2
டிஎம்சி- 9 
மற்றவை - 1 

டெல்லியில் பாஜக ஆதிக்கம்

Election Results 2024 LIVE: தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும், பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

Election Results 2024 LIVE: பாலியல் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக மாநில ஹசன் தொகுதி எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா தற்போதைய சூழலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட முன்னிலையில் உள்ளார்.

200 இடங்களை கடந்த பாஜக

Lok Sabha Election Result 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக தலைமையிலான கூட்டணி தற்போதைய சூழலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

மூத்த தலைவர்கள் முன்னிலை

Election Results 2024 LIVE: கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

பாஜக+ - காங்கிரஸ்+ இடையே கடும் போட்டி

India General Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான கூட்டணி 230 இடங்களிலும், I.N.D.I.A. கூட்டணி 120 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தபால் வாக்கு எண்ணிக்கை ஓவர்

India General Election Results 2024: பெரும்பாலான இடங்களில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் முடிவடைந்த நிலையில், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

I.N.D.I.A. கூட்டணி 100 இடங்களில் முன்னிலை

Lok Sabha Election Result 2024 LIVE: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 100 இடங்களில் முன்னிலை வகிப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கங்கனா ரனாவத் பின்னடைவு

Lok Sabha Election Result 2024 LIVE: இமாச்சலபிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட, நடிகை கங்கனா ரனாவத் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

200 தொகுதிகளில் பாஜக முன்னிலை

Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி 200 இடங்களில் முன்னிலை வகிப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

நாடு முழுவதும் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.





பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை

Election Results 2024 LIVE: Election மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், 8.25 மணி நிலவரப்படி I.N.D.I.A. கூட்டணி 61 தொகுதிகளில் முன்னிலை வகிக்க, பாஜக தலைமையிலான கூட்டணி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

I.N.D.I.A. கூட்டணி தொடர்ந்து முன்னிலை

Election Results 2024 LIVE: Election மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், 8.20 மணி நிலவரப்படி I.N.D.I.A. கூட்டணி 49 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான கூட்டணி 45 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

I.N.D.I.A. கூட்டணி முன்னிலை

Election Results 2024 LIVE: மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போதைய சூழலில்  I.N.D.I.A. கூட்டணி 30 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான கூட்டணி 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை

Election Results 2024 LIVE: மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் தாமதம் என கூறப்படுகிறது.

பாஜக முன்னிலை

India General Election Results 2024: தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், பாஜக கூட்டணி 7 இடங்களிலும், INDIA கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

10.5 லட்சம் மையங்களில் வாக்கு எண்ணிக்கை

Lok Sabha Election Result 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள், நாடு முழுவதும் 10.5 லட்சம் மையங்களில் நடைபெற்று வருகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்

Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான, தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்ததுமே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும்.





 

நாடு முழுவதும் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

India General Election Results 2024: நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.





தயார் நிலையில் வாக்கு எண்ணும் அதிகாரிகள்

Lok Sabha Election Result 2024 LIVE: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் அதிகாரிகள் அனைவரும் தயாராகியுள்ளனர்.





சென்னையில் ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்பட்டன

Election Results 2024 LIVE: சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள, ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்பட்டன.


 






 

மேற்குவங்கத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் காயம்

மேற்கு வங்கத்தில் பாங்குட்டின் பிளாக் 2, வடக்கு காஷிபூர், சல்தபேரியாவில் நடந்த வெடிவிபத்தில் குறைந்தது ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஐஎஸ்எஃப் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

17வது மக்களவை தேர்தல் முடிவுகள்

17வது மக்களவை தேர்தல் முடிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


பாஜக - 308
காங்கிரஸ்- 54
திமுக-24
தி. காங்கிரஸ்- 23
YSRCP- 23
சிவசேனா-19
JD(U)- 17
BJD-12
BSP- 10
BRS-9
SP-6
NCP-5
SAD-3
AIUDF-1
TDP-3
AAP -2
AIMIM-2
அப்னா தளம்-2
CPI-2
NPF-1
NDPP-1
RSP-1
RLP-1
SKM-1
VCK-1
அதிமுக- 1

பாஜகவின் 400ஆ? I.N.D.I.A. கூட்டணியின் 295ஆ? யார் கனவு பலிக்கும்?

பாஜக தங்களது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என கூறி வருகிறது. அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 295 இடங்களை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்து வருகிறது. இதில் யாருடைய எதிர்பார்ப்புகள் பலிக்கும் என்பது இன்னும் சற்றும் நேரத்தில் தெரிய வரும்.

திறக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூம்கள்..!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் 8 மணிக்கு தொடங்க உள்ளது. அதையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களை,  கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் திறந்துள்ளனர். 





மெகா பேரணிக்கு தயாராகும் நரேந்திர மோடி..!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தால், தற்போது தான் தங்கியுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து, டெல்லியில் உள்ள தங்களது கட்சி அலுவலகத்திற்கு பிரமாண்ட பேரணியாக செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். அப்போது பெரும் தொண்டர்படையை கூட்டவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

இதுவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்..

5.சி.எம். சாங்: - நாகலாந்து - 4, 83,021 வாக்குகள்


4. ராம் விலாஸ் பஸ்வான் - ஹஜ்புர் - 5,04, 448 வாக்குகள்


3. நரேந்திர மோடி - வாரணாசி - 5,70, 128 வாக்குகள் 


2. அனில் பாசு - அரம்பாக் - 5,92, 502 வாக்குகள்


1. சி.ஆர். பட்டீல் - நவசரி - 6, 89, 668 வாக்குகள்

கோயில்களுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள்,  இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, நாடு முழுவதும் வேட்பாளர்கள் பலரும் கோயில்களுக்குச் சென்று வழிபட தொடங்கியுள்ளனர்.


 





சுட சுட தயாராகும் உணவுகள்..!

மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியை ஒட்டி, டெல்லியில் பாஜக அலுவலகத்தில் உணவுகள் தயாராகி வருகின்றன. அதன்படி, பூரி, வடை மற்றும் லட்டு ஆகியவை தயார்படுத்தப்பட்டுள்ளன.





ஆந்திராவில் ஆட்சி மாற்றமா?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் ஆந்திராவிலும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதில் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா அல்லது சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஒடிசாவில் மீண்டும் நவீன் பட்நாயக் ஆட்சியா?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன், ஒடிசா சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அதில் தொடர்ந்து 5 முறை முதலமைச்சராக பதவி வகித்து வரும் நவீன் பட்நாயக், ஆறாவது முறையாகவும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

10% பெண் வேட்பாளர்கள்

நடப்பாண்டு மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 8,337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 797 பேர் அதாவது 9.6 சதவிகிதம் பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

முதல் வெற்றியை பறித்தது பாஜக

குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட முகேஷ்குமார் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதனால், 543 தொகுதிகளில் ஏற்கனவே ஒரு தொகுதியை பாஜக கைப்பற்றியது.

ஜி7 நாடுகளை விட அதிகம் - தேர்தல் ஆணையம்

‘ஜி7 நாடுகளின் ஒட்டுமொத்த வாக்களர்களின் எண்ணிக்கையை விட, இந்தியாவில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கு அதிகம். 27 ஐரோப்பிய  நாடுகளின் வாக்காளர்களை விட, இரண்டரை மடங்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.  தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றரை கோடி பேர் பணியில் ஈடுபட்டனர் - தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் - 64.2 கோடி பேர் வாக்குப்பதிவு:

7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவில், 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  உலகிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும். பெண்கள் மட்டுமே 31.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் - ஒவ்வொரு கட்டத்திலும் பதிவான வாக்குகள்

மக்களவை தேர்தல் - 7 கட்டங்களிலும் பதிவான வாக்கு சதவிகிதம்:  



  • முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும்

  • 2ம் கட்ட தேர்தலில், 66.71 சதவிகித வாக்குகளும்

  • 3-ம் கட்ட தேர்தலில், 65.68 சதவிகித வாக்குகளும்

  • 4-ம் கட்ட தேர்தலில், 69.16 சதவிகித வாக்குகளும்

  • 5-ம் கட்ட தேர்தலில், 62.2 சதவிகித வாக்குகளும்

  • 6-ம் கட்ட தேர்தலில், 61.98 சதவிகித வாக்குகளும்

  • 7-வது கட்ட தேர்தலில் 62.36 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள்

வாக்கு எண்ணும் பணிக்காக 10 அம்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 



  • ”வாக்குப்பதிவு தொடங்கிய நேரம், முடிந்த நேரத்தை கட்டுப்பாட்டு இயந்திரத்தில் சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

  • ஒவ்வொரு வாக்கு இயந்திரத்தின், தனி அடையாள எண், சீல்களை  சரிபார்க்கவும், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையையும் 17சி படிவத்தில் உள்ள எண்ணிக்கையையும் சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எண்ணும் முன், மொத்த வாக்குகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 

  • ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை  முடிந்த உடன் படிவம் எண் 20-ஐ தேர்தல் பார்வையாளர்கள் சரிபார்த்து கையெழுத்திடுவார்கள்

  • வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் நடைபெறும்

  • வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட, அதிகமாக தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அது மீண்டும் சரிபார்க்கப்படும்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

8 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் பதிவான வாக்குகளை, எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

களைகட்டும் பாஜக அலுவலகம்

ராஜஸ்தானில் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக பாஜக அலுவலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஜெய்பூரில் உள்ள மாநில தலைமை அலுவலகம் கட்சி கொடி மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தயார் நிலையில் இனிப்புகள்

சத்தீஷ்கரில் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்கு பாஜக தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக 201 கிலோ லட்டு உள்ளிட்ட இனிப்புகளை, ராஜ்பூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.





டெல்லி தீவிர கண்காணிப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி டெல்லியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். 





Lok Sabha Election Results 2024 LIVE: எத்தனை தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை

7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி களம் கண்டதால், அவரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் 542 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை  இன்று ( ஜூன் 4 ஆம் தேதி ) எண்ணப்படுகிறது

Lok Sabha Election Results 2024 LIVE: வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்?

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதையடுத்து, அடுத்த 30 நிமிடத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆனால் இம்முறை, எண்ணப்பட்ட தபால் வாக்குககளின் முடிவுகள் முதலில் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும், கடைசி கட்ட மின்னணு வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே தபால் வாக்குகள் முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Lok Sabha Election Results 2024 LIVE: எப்போது வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கையானது, காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

Lok Sabha Election Results 2024 LIVE: வாக்கு எண்ணிக்கை

18வது மக்களவைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவானது  ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில் ஜூன் 4 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Background

Lok Sabha Elections Result 2024:


இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவானது  ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில் ஜூன் 4 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையானது, காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மக்களவைத் தேர்தல்:


உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக பார்க்கப்படும் இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி களம் கண்டதால், அவரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் 542 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை  இன்று ( ஜூன் 4 ஆம் தேதி ) எண்ணப்படுகிறது


இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.


வாக்கு சதவிகிதம்:


முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில், 66.71 சதவிகித வாக்குகளும், 3-ம் கட்ட தேர்தலில், 65.68 சதவிகித வாக்குகளும், 4-ம் கட்ட தேர்தலில், 69.16 சதவிகித வாக்குகளும், 5-ம் கட்ட தேர்தலில், 62.2 சதவிகித வாக்குகளும், 6-ம் கட்ட தேர்தலில், 61.98 சதவிகித வாக்குகளும் 7-வது கட்ட தேர்தலில் 62.36 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


வாக்கு எண்ணிக்கை:


வாக்கு எண்ணிக்கையானது, காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதையடுத்து, அடுத்த 30 நிமிடத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆனால் இம்முறை, எண்ணப்பட்ட தபால் வாக்குககளின் முடிவுகள் முதலில் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும், கடைசி கட்ட மின்னணு வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே தபால் வாக்குகள் முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடுமையான போட்டி:


மக்களவைக்காக நடைபெற்று வரும் தேர்தலில் தேசிய அளவில் முக்கியமாக 2 கூட்டணிகள் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் I.N.D.I.A. கூட்டணி இடையேயான மோதல் தீவிரமாக இருந்தது. தங்களது கூட்டணி வந்தால் என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டு வரப்படும், நாட்டின் வளர்ச்சிக்கான கைவசம் உள்ள திட்டங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.


தேர்தலின்போது  ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும், பல இடங்களில் தேர்தலானது சுமூகமாகவே நடைபெற்றது.


தொடர் நேரலை:


இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தான தேசிய அளவிலான உடனடி தகவலை ஏபிபி நாடு வலைதள பக்கத்தில் தொடர் நேரலையாக பார்க்கலாம்.


மக்களவைத் தேர்தலின் முடிவுகளை வைத்து யார் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்றும், தொகுதிகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்தும்,  நட்சத்திர வேட்பாளர்கள் நிலைமை குறித்துமான தேசிய அளவிலான தகவலை இந்த பக்கத்தில் தொடர் நேரலையாக காணலாம்.


வாக்கு எண்ணிக்கை குறித்தான சமீபத்திய மற்றும் உடனடி தகவல்களை ஏப்பி நாடு ABP Nadu வலைதளத்தில் நேரடியாக வழங்க இருக்கிறோம். அதற்கு, தொடர்ந்து இணைந்திருங்கள், இந்த நேரலை பக்கத்தில்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.