நாடாளுமன்ற தேர்தல் 


இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


Lok Sabha Election 2024: நேற்று டீ கடை, இன்று காய்கறி கடை, நாளைக்கு என்ன வேட்பாளரே? - எதிர்பார்க்கும் மயிலாடுதுறை வாக்காளர்கள்




வீட்டுமனை பட்டா கோரிக்கை 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இளையாலூர் ஊராட்சி புதுத்தெருவில் 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 600 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 400 வாக்காளர்களும் அடங்குவர். இந்நிலையில் 3 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்கள் தொடர்ந்து தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கை இந்நாள் வரை அரசு நிறைவேற்றி தரவில்லை. 


எனது நண்பர் ஸ்டாலின் தேர்தலில் நிச்சயம் வெற்றி அடைவார் - வானிலை புகழ் ரமணன்




இன்னல்களுக்கு ஆளாகும் மக்கள்


இதனால் இருப்பிட சான்று கிடைக்காமல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கி கணக்கு தொடங்குவது, கல்வி கடன் பெறுவதில் என வாழ்வாதார சார்ந்து பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அரசு அலுவலர்கள் புது தெரு குடியிருப்புகள் அர்ஜுனன் வாய்க்கால் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ளதால் இலவச பட்டா வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கூறி தங்களுக்கு பட்ட வழங்காமலும் அல்லது மாற்று இடம் வழங்காமலும் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டியுள்ளனர்.


SACON Recruitment:விலங்கியல் பட்டம் பெற்றவரா? கோவையில் வேலை; விண்ணப்பிக்கும் முறை - முழு விவரம்!




தேர்தல் புறக்கணிப்பு


மேலும் இதனால் ஆத்திரமடைந்த புது தெரு கிராமவாசிகள் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து இன்று அவர்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக கூறி கைகளில் கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தங்கள் பகுதிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசு 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி பல்வேறு வகையான பிரச்சாரங்களையும், ஏற்பாடுகளையும் செய்து வரும் நிலையில், சுமார் 150 குடும்பங்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கருப்பு கொடி கட்டியுள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்.. 6-ஆம் தேதி வரை 41 டிகிரி செல்சியஸ்.. எச்சரிக்கை கொடுக்கும் வானிலை..