இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வீடுகளில் இருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் வீடுகள் தோறும் வாக்களிக்கும் முறை துவங்கியுள்ளது. இதில் தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் 616 நபர்களும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 618 நபர்களும் வாக்களிக்க உள்ளனர்.


RR vs RCB LIVE Score: கட்டுக்கோப்பாக பந்து வீசும் ராஜஸ்தான்; நிதானமாக ரன்கள் சேர்க்கும் ஆர்.சி.பி!




2024 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக இந்திய தேர்தல் ஆணையம்  85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விருப்பம் உள்ளோர் வீட்டிலிருந்து வாக்களிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


CM Stalin: ”எரியுது மாலா” வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை கலாய்த்த முதலமைச்சர் ஸ்டாலின்


இந்த நடைமுறையில், நேற்று தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும்  வீட்டில் இருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் 616 நபர்களும் 85 வயதுக்கு மேற்பட்டோர் முதியவர்கள் 618 நபர்களும் விருப்பம் தெரிவித்தனர்.


Indian 2 Release Date: 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்தியன் தாத்தா! கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் எப்போது?


தேர்தல் நேரம்! பயங்கரவாதிகளுக்கு எதிராக கொந்தளித்த ராஜ்நாத் சிங் - எதிர்வினையாற்றிய பாகிஸ்தான்!


இதனை அடுத்து  6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர் உள்ளிட்ட விருப்பம் தெரிவித்தவர்களிடம் வாக்கு சேகரிக்கும் முறை துவங்கி உள்ளது . இதில் தேர்தல் நடத்தும் அலுவலர், காவலர், மைக்ரோ அப்சர்வர், மற்றும் ஒளிப்பதிவாளர் உட்பட நான்கு நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 164 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டு முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் வாக்குகள் செலுத்திய பின்பு வாக்குகளை பெட்டிகளில் சேகரித்து வருகின்றனர்.