Kangana Ranuat: “நான் மாட்டிறைச்சி சாப்பிடாத இந்து..தப்பா சொல்லாதீங்க” - குமுறிய நடிகை கங்கனா ரனாவத் !

நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார். அவர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

Continues below advertisement

நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன என நடிகை கங்கனா ரனாவத் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Continues below advertisement

மக்களவை தேர்தல் திருவிழா இந்தியாவில் களைகட்டியுள்ளது. திரும்பும் இடமெல்லாம் அரசியல் கட்சியினரின் ஊர்வலம், பொதுக்கூட்டம், வாகன பேரணி என வித்தியாசமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மத்தியிலும், மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இப்படியான நிலையில் வழக்கம்போல நாடாளுமன்ற தேர்தலில் சினிமா பிரபலங்களும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். 

அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார். அவர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் வழக்கம்போல கடந்த காலங்களில் அவர் செய்த பல சம்பவங்களை எதிர்க்கட்சிகள் கிளறியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், கங்கனா மாட்டிறைச்சி சாப்பிட்டதாக தெரிவித்தார். இந்த கருத்தால் ஆவேசமடைந்த கங்கனா, ‘இந்த செயல் வெட்கக்கேடானது என்றும்,தனது செல்வாக்கை கெடுக்க முயற்சி நடக்கிறது’ என குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த வகையான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது, நான் பல தசாப்தங்களாக யோகி மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்து, ஊக்குவித்து வருகிறேன். என்னைப் பற்றி  மக்களுக்கு நன்றாக தெரியும். நான் ஒரு பெருமைமிக்க இந்து என்பது அவர்களுக்குத் தெரியும், அவர்களை எதுவும் தவறாக வழிநடத்த முடியாது, ஜெய் ஸ்ரீ ராம்” என கூறியுள்ளார். 

முன்னதாக 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கங்கனா மாட்டிறைச்சி சாப்பிட்டதாக விமர்சனம் எழுந்தது. மேலும், “நான் வீட்டை விட்டு வெளியேறிய அன்று, என்னுடைய அம்மா எக்காரணத்தை கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தினார். அவர் அப்படி சொன்னதில் என்னதான் இதில் இருக்கிறது என முயற்சி செய்து பார்க்க நினைத்தேன். ஒரு கட்டத்தின் நான் முயற்சித்தேன். எனக்கு மாட்டிறைச்சி பிடித்திருந்தது. நான் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டேன்” என தெரிவித்த வீடியோவும் ட்ரெண்டானது. 

இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய கங்கனா தரப்பு, “அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அசைவம் சாப்பிடுவதை கைவிட்டு விட்டார். மாட்டிறைச்சி அல்லது எந்த இறைச்சியையும் சாப்பிடுவதில் தவறில்லை. கங்கனா சைவ வாழ்க்கையை தேர்வு செய்தது பற்றி மறைப்பதற்கு எதுவுமில்லை. இது மதம் சார்ந்த பிரச்சினையாக பார்க்க வேண்டாம்” என தெரிவித்திருந்தது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola