Indian 2 Release Date: 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்தியன் தாத்தா! கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் எப்போது?

Indian 2 Release Date: உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Continues below advertisement

Kamal Haasan Indian 2 Release Date: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் நடித்து கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் இந்தியம் படம் முக்கியமானது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

இந்தியன் 2 படக்குழு

லைகா ப்ரெடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கமல்ஹாசன், ரகுல் ப்ரித் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் , பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயது. சென்னை , ராஜமுந்திரி, போபால் , க்வாலியர், தைவான், ஜோகன்ஸ்பேர்க் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா நோய்த் தொற்று பரவலான் இந்தியன் 2 படப்பிடிப்பு தடைபட்டது. பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.

இந்தியன் 2 ரிலீஸ்

பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. அடுத்தபடியாக மக்களவை தேர்தல் தேதி காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதியை திட்டவட்டமாக தற்போது அறிவித்துள்ளது படக்குழு. வரும் ஜூன் இந்தியன் 2 வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola