பெரியகுளம் ஒன்றியம் ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேனி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.




தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டு தேனி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தினந்தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் . அதனைத் தொடர்ந்து பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் அமமுக தேனி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரித்து அவரது மனைவி அனுராதா  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  


CSK vs KKR LIVE Score: நரைன் - ரகுவன்ஷி அதிரடி பேட்டிங்; விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் சி.எஸ்.கே!


வாக்கு சேகரிப்பின்போது அனுராதா பேசுகையில், “14 ஆண்டுகள் கழித்து மீண்டும் டிடிவி தினகரன் உங்களுக்காக பணி செய்ய வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். குக்கர் சின்னத்தில் பொதுமக்களாகிய நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும், அடிப்படை உரிமைகளை மீட்பதற்கானது. டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். டிடிவி தினகரன் பொதுமக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்கள் செய்துள்ளார். அதுவும் உங்களுக்கு தெரியும். தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனை வெற்றி பெற  வைத்து இங்கேயே இருக்க வைத்து விடுங்கள்.


Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் - போக்குவரத்து துறை அறிவிப்பு



TASMAC: மக்களவைத் தேர்தல்! தமிழ்நாட்டில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் - என்ன தேதி?


நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்களாகிய நீங்கள் அமோக வரவேற்பு அளிக்கின்றீர்கள். அது எங்களது பூர்வீக ஜென்ம பந்தமாக பார்க்கின்றோம். இது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் 14 ஆண்டுகளுக்கு முன்பு போட்டியிட்டபோது டிடிவி தினகரனுக்கு வேறு சின்னம் இருந்தது தற்போது குக்கர் சின்னம் உள்ளது. பொதுமக்கள், முதியோர்கள், முதன்முறை வாக்காளர்கள் என அனைவரும் குக்கர் சின்னத்தில் சின்னத்தில் வாக்களிக்க எடுத்துக் கூறி அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று பேசினார். முன்னதாக டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவுக்கு  அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்  ஏலக்காய் மாலை, பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கரட்டூர், வைத்தியநாதபுரம், அரண்மனை தெரு, சௌராஷ்ட்ரா சத்திரம், திருவள்ளுவர் சிலை, அழகர்சாமிபுரம், மூன்றாந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.