மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வெறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக



  • வக்குப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்

  • தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது என வலியுறுத்தப்படும்

  • அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

  • ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்

  • மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த தொடர்ந்து வலியுறுத்தப்படும்

  • பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் விசிக மேற்கொள்ளும்

  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர விசிக –வின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்

  • தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்ய வலியுறுத்தப்படும்

  • தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பு உறுதி செய்ய விசிக குரல் கொடுக்கும்

  • இந்தி திணிப்பை எதிர்ப்பு அனைத்து மொழிகளின் பாதிகாப்பினை காக்க விசிக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்

  • தேசிய மனித உழைப்பு நேரம் மற்றும் மதிப்புக்கொள்கை குறித்து வலியுறுத்தப்படும்

  • வறுமைக்கோட்டு உச்ச வரம்பினை உயர்த்த விசிக தரப்பில் வலியுறுத்தப்படும்

  • ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்

  • விவசாய கடன் ரத்து செய்ய குரல் கொடுக்கும்

  • கார்ப்பரேட் மற்றும் தனியார்மயத்தை கைவிட தொடர்ந்து வலியுறுத்தப்படும்

  • சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்

  • மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்

  • சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் தொடர்பாக குரல் கொடுக்கும் விசிக

  • மாநில அரசுகளின் வாயிலாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தல் 

  • மத்திய அரசின் தமிழ்நாட்டுப் பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம்

  • இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னை அமைக்க வலியுறுத்தப்படும் 

  • அமைச்சரவையிலும், மேலவையிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

  • ஆணவக்கொலை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர குரல் கொடுக்கும்

  • பட்டியலின கிறுத்துவர்களை அட்டவணைச் சாதிகள் பட்டியலில் இணைக்க வலியுறுத்தல்

  • பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வர வலியுறுத்தல்