CSK vs KKR LIVE Score: கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
IPL 2024 CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் - ஷிவம் துபே சிறப்பாக ஆடி வருகின்றனர். இதனால், சென்னை அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
14 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
13.2 ஓவர்கள் முடிவின் படி 100 ரன்களை தாண்டி விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பேட்டிங்கில் ருதுராஜ் மற்றும் துபே ஜோடி இருக்கின்றனர்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 25 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 96 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 45 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசும் முனைப்பில் விளையாடி வருகிறார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
9 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் ருதுராஜ் - மிட்செல் ஜோடி மிரட்டுகின்றனர்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் சி.எஸ்.கே 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி உள்ளார்.
ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் டேரில் மிட்செல். இருவரும் ஓரளவிற்கு நன்றாக விளையாடி வருகின்றனர்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரச்சின் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மூன்றாவது ஓவரில் மட்டும் 16 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார் மிட்செல்.
ரச்சின் ரவீந்திரா தனது முதல் பவுண்டரியை பதிவு செய்துள்ளார்.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் தங்கள் முதல் பவுண்டரியை விளாசியுள்ளது.
முதல் ஓவர் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கொல்கத்தா வீரர் ஸ்டார்க் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். கே.கே.ஆர் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட 34 ரன்கள் எடுத்தார்.
19 ஓவர்கள் முடிந்தநிலையில் 135 ரன்கள் எடுத்துள்ளது கே.கே.ஆர் அணி.
சென்னை அணி தொடர்ந்து சிறப்பாக பந்துவீசுவதால் கொல்கத்தா வீரர்களால் ரன் சேர்க்க முடிவதில்லை.
துஷார் தேஷ்பாண்டே பந்தில் 9 ரன்களில் ரிங்குசிங் போல்டானார். கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணி அதிரடிக்கு மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியுள்ளது.
சென்னை அணியினர் நடத்தும் சுழல் தாக்குதலால் கொல்கத்தா அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது.
சென்னை அணியின் தீக்ஷனா, ஜடேஜா, ரவீந்திரா தொடர்ந்து சுழல் தாக்குதல் நடத்துவதால் கொல்கத்தா அணி ரன் எடுக்கத் தடுமாறி வருகிறது. ஆனாலும், ராமன்தீப் அதிரடியாக ஆட முயன்ற ராமன்தீப் போல்ட் ஆனார்.
10 ஓவர்களில் கொல்கத்தா அணி 70 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் - ராமன்தீப் நிதானமாக ஆடி வருகின்றனர்.
கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர் ஜடேஜா சுழலில் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சுனில் நரைன் ஜடேஜா பந்தில் அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி வந்த ரகுவன்ஷி ஜடேஜா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 24 ரன்கள் எடுத்தார்.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் கொல்கத்தா அணி 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் சுனில் நரைன் சிக்ஸர் விளாசியுள்ளார்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 விக்கெ இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்து விளாயாடி வருகிறது.
ஷர்துல் தாகூரின் பந்தில் இரண்டாவது பவுண்டரியை விளாசியுள்ளார் சுனில் நரைன்.
நான்கவது ஓவரின் முதல் பந்தில் நரைன் பவுண்டரி விளாசி அசத்தியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷர்துல் தாகூர் இந்த போட்டியின் நான்காவது ஓவரை வீச வந்துள்ளார். பேட்டிங்கில் ரகுவன்ஷி மற்றும் நரைன் மிரட்டி வருகின்றனர்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் முதல் சிக்ஸரை விளாசியுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன்.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது.
கே.கே.ஆர் வீரர் ரகுவன்ஷி போட்டியின் முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் ரகுவன்ஷி மற்றும் நரைன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் தேஷ் பாண்டே தான் வீசிய முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 ரன் மட்டுமே எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிலில் சால்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்துள்லார். இந்த விக்கெட்டை சென்னை அணியின் பந்து வீச்சாளர் தேஷ்பாண்டே எடுத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களா பிலிப் சால்ட் மற்று சுனில் நரேன் களம் இறங்கியுள்ளனர்.
இந்த சீசனில் முதல் முறையாக டாஸ் வென்றுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன் ), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர் ), ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர் ), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ஹர்சித் ராணா மற்றும் ஆண்ட்ரோ ரஸ்ஸில் அதிக விக்கெட்டுகளை அந்த அணியின் சார்பில் எடுத்த வீரர்களாக இருக்கின்றனர்.
இந்த சீசனில் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த சி.எஸ்.கே இன்றைய போட்டியில் புது ரூட்டை பயன்படுத்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கே.கே.ஆர் இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
சி.எஸ்.கே மற்றும் கே.கே.ஆர் மோதும் போட்டியை காண்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது 21 வது லீக் போட்டி. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.
Background
IPL 2024 CSK vs KKR
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று (ஏப்ரல் 8) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.
நேருக்கு நேர்
சி.எஸ்.கே இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், கொல்கத்தா அணியோ விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 225 ரன்களையும், குறைந்தபட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -