தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் திருவிழா சூடுபிடித்துள்ளது. தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, தங்கள் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு 123 கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 28 ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்று மட்டும் மயிலாடுதுறை நகராட்சியில் 107, சீர்காழி 49, பேரூராட்சிகளான தரங்கம்பாடியில் 34, மணல்மேடு 24, குத்தாலம் 19, வைத்தீஸ்வரன்கோவில் 23 என்று மொத்தம் 256 பேர் ஒரேநாளில் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
Local body Election | திருவண்ணாமலை மாவட்டத்தில் 273 வார்டுகளுக்கு 1592 வேட்பாளர்கள் வேட்பு மனு
இதுவரை மயிலாடுதுறை நகராட்சியில் 290 பேரும், சீர்காழி நகராட்சியில் 150 பேரும், குத்தாலம் பேரூராட்சி 129, தரங்கம்பாடி 105, வைத்தீஸ்வரன்கோவில் 81, மணல்மேடு 103 என்று மாவட்டத்தில் மொத்தம் 858 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று வேட்புமனு பரிசீலனையும், 7 ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும்.
யாரா இருந்தாலும் வெட்டுவேன்...’ அலும்பு பேசி எலும்பு முறித்துக் கொண்ட அதிமுக ஒன்றிய செயலாளர் !
மயிலாடுதுறை மாவட்டத்தில் 72 ஆயிரத்து 846 ஆண் வாக்காளர்களும், 77 ஆயிரத்து 77 பெண் வாக்காளர்களும், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிட்ட 1 இலட்சத்து 49 ஆயிரத்து 938 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க 182 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்ட உள்ளது. இதில் 54 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தையில் பலருக்கும் தங்கள் எதிர்பார்த்த வார்டுகளை ஒதுக்கிடுகள் செய்யாதது, சீட்டுகள் அளிக்காதது என அதிருப்தியில் உள்ள நிலையில், தங்கள் சார்ந்த கட்சிக்கு எதிராக செயல்படும் மன நிலையும் காணப்படுவதால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்புகளில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளனர்.