நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதவை கடந்த 1ஆம் தேதி ஆளுநர் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 


 


இந்நிலையில் இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “கடந்த 2006 டாக்டர் அனந்தகிருஷ்ணன் அளித்த பரிந்துரையில் நுழைவு தேர்வு ரத்து சட்டம் முன் வடிவு கொண்டுவரப்பட்டது. சட்ட முன் வடிவுக்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை, சட்டத்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை அதோடு, 87 நாட்களில் சட்டமுன்வடிவுக்கு குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்  தமிழ்நாட்டு அரசின் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக இல்லை என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று தற்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு மசோத சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். அதை நீண்ட நாட்கள் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார். அரசியல் சாசனப்படி ஆளுநர் தன்னுடைய கடமையை செய்யவில்லை. 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் அந்தச் சட்டத்தை தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்” எனக் கூறியுள்ளார். 


இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 8ஆம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டம் ஒருநாள் சிறப்பு கூட்டம் என்பதால் புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.  இந்த சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக,அதிமுக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. ஏற்கெனவே பாஜக நீட் தேர்விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் 94 ரவுடிகள் கைது