திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும், 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன. இதையொட்டி கடந்த 28 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதற்கிடையில் கடந்த 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை நாள் என்பதால் அன்று ஒருநாள் மட்டும் வேட்பு மனு தாக்கல் நடைபெற வில்லை. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் ஆர்வமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். 



இதனையடுத்து  நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சையை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர். சிலர் தாரை தப்பட்டை அடித்து கொண்டு வந்தனர். அவர்களை காவல்துறையினர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பே தடுத்து நிறுத்தனர். இதனால் வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற அலுவலகங்கள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அந்த அலுவலகங்கள் பரபரப்பாக காணப்பட்டது.


Local Body Election: இன்ஸ்டாவில் தொடர்பு கொண்டால் குறைகள் நிவர்த்தி - வேட்பாளராக களம் இறங்கும் 22 வயது பெண்




இறுதி நாளான இன்று ஆரணி நகராட்சியில் 97 நபர்களும், திருவண்ணாமலை நகராட்சியில் 227 நபர்களும், திருவத்திபுரம் நகராட்சியில் 106 நபர்களும், வந்தவாசி நகராட்சியில் 47 நபர்களும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆரணி நகராட்சி 7 ஆவது வார்டில் பா.ம.க. சார்பில் போட்டியிடுபவர் முகமதுஜாகீர். இவர், சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது 


அதேபோல் செங்கம் பேரூராட்சியில் 32 நபர்களும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 77 நபர்களும், தேசூர் பேரூராட்சியில் 30 நபர்களும், களம்பூர் பேரூராட்சியில் 21 நபர்களும், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 33 நபர்களும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 46 நபர்களும், பெரணமல்லூர் பேரூராட்சியில் 17 நபர்களும், போளூர் பேரூராட்சியில் 63 நபர்களும், புதுப்பாளையம் பேரூராட்சியில் 27 நபர்களும், வேட்டவலம் பேரூராட்சியில் 23 நபர்களும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆக மொத்தம் ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 846 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இதுவரையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1592 நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.